11503.
رَأَيْتُ عَامِرًا «صَلَّى عَلَى جِنَازَةٍ، فَسَلَّمَ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ»
Musannaf-Ibn-Abi-Shaybah
11503.
رَأَيْتُ عَامِرًا «صَلَّى عَلَى جِنَازَةٍ، فَسَلَّمَ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ»
1895.
لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ، كَانَ بَاطِنُ الْقَدَمَيْنِ أَوْلَى وَأَحَقَّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرَهُمَا، وَلَكِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ ظَاهِرَهُمَا»
11402. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் தல்ஹா (ரஹ்)
أَنَّهُ «قَرَأَ عَلَيْهَا بِفَاتِحَةِ الْكِتَابِ»
11443. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் ஜனாஸாத் தொழுகையில் வெவ்வேறு எண்ணிக்கையில் தக்பீர் கூறி வந்தனர். பிறகு, நமக்கு பின் வருபவர்கள் கடைபிடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு எண்ணிக்கையில் ஒன்றுப்பட வேண்டும் என்பதற்காக நான்கு தக்பீர் கூறினர்.
அறிவிப்பவர் : அம்ர் பின் முர்ரா (ரஹ்)
«كُلٌّ قَدْ فَعَلَ» فَقَالُوا: نَجْتَمِعُ عَلَى أَمْرٍ يَأْخُذُ بِهِ مَنْ بَعْدَنَا فَكَبَّرُوا عَلَى الْجِنَازَةِ أَرْبَعًا
11254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறவில்லை. (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுபைரா
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ فِي جِنَازَةٍ فَلَمْ يَرْكَبْ ، فَلَمَّا انْصَرَفَ رَكِبَ.
11589. ‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)
ஸியாதின் மற்ற மாணவர்கள் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கிறார்கள். நான் அவ்வாறு மனனமிடவில்லை என அறிவிப்பாளர் யூனுஸ் கூறுகிறார்.
«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، ثُمَّ يُدْعَى لِأَبَوَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»
قَالَ يُونُسُ: وَأَهْلُ زِيَادٍ يَرْفَعُونَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا لَا أَحْفَظُهُ
11583. சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
11368. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)
«الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
12076. இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் ஸுன்துஸ் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
«مَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنْ سُنْدُسِ الْجَنَّةِ وَحَرِيرِهَا»
11384. நான் மரணித்துவிட்டால் என்னை (அடக்கம் செய்ய) விரைவாக கொண்டு சென்றுவிடுங்கள் என அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)
إذَا أَنَا مِتُّ فَأَسْرِعُوا بِي الْمَشْيَ
சமீப விமர்சனங்கள்