Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-9744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்பாளி நோன்புத் துறக்கும் போது என்ன கூறவேண்டும்?

9744. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள், “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃப ஸும்து, வ ரஸகனீ ஃப அஃப்த்தர்து (பொருள்: நான் நோன்பு வைக்கவும், நோன்புத் துறக்க உணவளித்தும் உதவி செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.

 


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَامَ ثُمَّ أَفْطَرَ، قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»

قَالَ: وَكَانَ الرَّبِيعُ بْنُ خُثَيْمٍ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعَانَنِي فَصُمْتُ وَرَزَقَنِي فَأَفْطَرْتُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19555

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தாலோ, இறைவழியில் போரிடும் ஒருவருக்கு அல்லது ஹஜ் (புனித பயணம்)  செல்பவருக்கு பயண வசதி செய்து கொடுத்தாலோ, அல்லது அவர்களின் வீட்டாரின் நலனை பாதுகாத்தாலோ, அவர்களுக்கு கிடைக்கும் கூலியிலிருந்து எதுவும் குறையாமல் அவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


مَنْ فَطَّرَ صَائِمًا أَوْ جَهَّزَ غَازِيًا أَوْ حَاجًّا أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ كَانَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا


Musannaf-Ibn-Abi-Shaybah-17138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17138. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْآبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ رُءُوسَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْأَبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-17130

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17130. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.


كَانَ يُقَالَ: ” أَشَدُّ النَّاسِ عَذَابًا اثْنَانِ: امْرَأَةٌ تَعْصِي زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4110

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4110. அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர் வெறுத்தும் அவர்களின் தலைவராக இருப்பவர் என்று (எங்கள் காலத்தில்) சொல்லப்பட்டுவந்தது.


كَانَ يُقَالُ: أَشَدُّ النَّاسِ عَذَابَا امْرَأَةٌ تُعْصِي زَوْجَهَا، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-25895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25895. அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)

அறிவிப்பவர் : கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا: «فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-24234

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24234.


عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ بِشَاةٍ فَقَالَ: «يَا فَاطِمَةُ، احْلِقِي رَأْسَهُ وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً»، فَوَزَنُوهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ


Musannaf-Ibn-Abi-Shaybah-10853

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10853. உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»، يَعْنِي يس


Next Page » « Previous Page