Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-3412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3412.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَقُولُ: «بِسْمِ اللَّهِ، وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ»، وَإِذَا خَرَجَ قَالَ: «بِسْمِ اللَّهِ، وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-8920

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8920. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً»


Musannaf-Ibn-Abi-Shaybah-9398

ஹதீஸின் தரம்: More Info

9398. நோன்பாளி மனைவியை முத்தமிடுவது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், பரவாயில்லை (முத்தமிடலாம்) என்று கூறிவிட்டு, நான் நோன்பாளியாக இருக்கும் போது (என் மனைவியின்) உதட்டின் ஒரப்பகுதியில் தான் முத்தமிட விரும்புவேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிஹாப் பின் முத்லிஜ் (ரஹ்)


سُئِلَ عَنْ الْقُبْلَةِ لِلصَّائِمِ، فَقَالَ: «لَا بَأْسَ إِنِّي أُحِبُّ أَنْ أَرْشُفَهَا وَأَنَا صَائِمٌ»

سُئِلَ عَنِ الْقُبْلَةِ لِلصَّائِمِ؟ فَقَالَ: إِنِّي أُحِبُّ أَنْ أَرُفَّ شفَتَيْهَا وَأَنَا صَائِمٌ.


Musannaf-Ibn-Abi-Shaybah-29262

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

29262. அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும்,

“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். லா இலாஹ இல்லல்லாஹு, வ லா நஅபுது இல்லா இய்யாஹு லஹுந் நிஅமத்து வ லஹுல் ஃபள்லு. வ லஹுஸ் ஸனாஉல் ஹசனு. லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்”

(அல்லாஹவைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம் (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்); இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே) என்று கூறுவார்கள்.

மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، كَانَ يُهَلِّلُ دُبُرَ كُلِّ صَلَاةٍ، يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ، وَلَهُ الْفَضْلُ، وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ» ثُمَّ يَقُولُ ابْنُ الزُّبَيْرِ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَلِّلُ بِهِنَّ دُبُرَ كُلِّ صَلَاةٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29739

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29739. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்தப்படும்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத் (ரஹ்)


«إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ مِنْ بَعْدِهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12082

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12082. ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்து உயர்த்தப்படும்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்


«إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ لَهُ مِنْ بَعْدِهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29740

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ لَهُ الدَّرَجَةُ فِي الْجَنَّةِ، فَيَقُولُ: يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ؟، فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-12081

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன்  இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّجُلَ لِيَرْقَى الدَّرَجَةَ، فَيَقُولُ: مَا هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ مِنْ بَعْدِكَ لَكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-9502

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

9502. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ இருக்காதோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வேறு சிலரும் இருக்கும் போது அவர்களுக்கு முன் பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது.  அனைவரும் அதை சாப்பிடுவதற்கு ஒன்று கூடினர். ஒரு மனிதர் மட்டும் அவர்களை விட்டு விலகினார். அம்மார் (ரலி) அவர்கள், அவரிடம், வந்து சாப்பிடுங்கள்! என்று கூறினார்கள். அவர் நான் நோன்பாளி என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் வந்து சாப்பிடு! என்று கூறினார்கள்.


أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «تَعَالَ فَكُلْ» قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «إِنْ كُنْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَتَعَالَ فَكُلْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9503

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9503. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் (பிறை தெரியாத) சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: ஸிமாக் (ரஹ்)

 


«مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page