Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-25744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


«أَلَا أُنَبِّئُكُمْ بِأَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29451

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29451. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29438. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ، غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29416

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29416. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் அல்லது ஏதோ ஒரு மரம்  நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، غُرِسَ لَهُ نَخْلَةٌ، أَوْ شَجَرَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29189

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

29189. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


«لَوْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ كَانَ أَكْثَرُ دُعَائِي فِيهَا أَسْأَلُ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29187

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

29187. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்)


«لَوْ عَرَفْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-13919

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

13919. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ فِيهِنَّ الْعَمَلُ مِنْ هَذِهِ الْأَيَّامِ أَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ وَالتَّحْمِيدَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-26719

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

26719. அபூஹுரைரா (ரலி) அவர்கள் மஹ்தியே! நீ வரி வசூலிப்பவராகவோ, செயலாளராகவோ, காவலராகவோ இருக்க வேண்டாம் என்று எனக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்தீ அல்லது மஹ்ரீ


قَالَ لِي: يَا مَهْدِيُّ لَا تَكُنْ جَابِيًا وَلَا عَرِيفًا وَلَا شُرْطِيًّا


Musannaf-Ibn-Abi-Shaybah-52

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

52.


كُنْتُ مَعَ سَلْمَانَ، فَأَخَذَ غُصْنًا مِنْ شَجَرَةٍ يَابِسَةٍ فَحَتَّهُ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ تَحَاتَتْ خَطَايَاهُ كَمَا يَتَحَاتُّ الْوَرِقُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29764

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29764.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ، يَقُولُ: «بِسْمِ اللَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ»، وَإِذَا خَرَجَ قَالَ: «بِسْمِ اللَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ»


Next Page » « Previous Page