Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-25321

ஹதீஸின் தரம்: More Info

25321.  இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் யாரெனில் அவர்களில் நற்குணம் கொண்டவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25318

ஹதீஸின் தரம்: More Info

25318. மக்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவரும், இறை நம்பிக்கை கொண்டவர்களில் சிறந்தவரும் யாரெனில் அவர்களில் நற்குணம் கொண்டவரே!

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ النَّاسِ إِيمَانًا وَأَفْضَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30370

ஹதீஸின் தரம்: More Info

30370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!”

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25319

ஹதீஸின் தரம்: More Info

25319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-16384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَعْظَمُ النِّسَاءِ بَرَكَةً أَيْسَرُهُنَّ مُؤْنَةً»


Musannaf-Ibn-Abi-Shaybah-23466

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23466. யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)

என அபூ மிஜ்லஸ் (ரஹ்) கூறினார்.


«مَنْ تَعَلَّقَ عِلَاقَةً وُكِلَ إِلَيْهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-23457

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23457. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்)

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி)


«مَنْ تَعَلَّقَ عِلَاقَةً وُكِلَ إِلَيْهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-31701

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

31701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார்.

“உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை” என்று அவ்வானவர் கூறினார்.


«بَيْنَمَا جِبْرِيلُ جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ» فَقَالَ: «لَقَدْ فُتِحَ بَابٌ مِنَ السَّمَاءِ مَا فُتِحَ قَطُّ» , قَالَ: فَأَتَاهُ مَلَكٌ فَقَالَ: ” أَبْشِرْ بِنُورَيْنِ أُوتَيْتُهُمَا لَمْ يُعْطَهُمَا مَنْ كَانَ قَبْلَكَ: فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ , لَمْ تَقْرَأْ مِنْهُمَا حَرْفًا إِلَّا أُعْطِيتَهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-36442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

36442. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ , لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-13243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13243. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Next Page » « Previous Page