Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-3120

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3120. அபூஉபைத் ஸுலைமான் பின் அப்துல் மலிக் கூறியதாவது:

மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள ஒரு பெரியவர் சொல்ல கேட்டேன்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பம் உண்டு. தொழுகையின் ஆரம்பம் முதல் தக்பீராகும். எனவே (ஜமாஅத்துடன் தொழும்போது) அதை (தவறவிடாமல்)  பேணிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுத்தர்தா (ரலி) அறிவித்தார்.

 


«إِنَّ لِكُلِّ شَيْءٍ أَنَفَةً، وَإِنَّ أَنَفَةَ الصَّلَاةِ التَّكْبِيرَةُ الْأُولَى، فَحَافِظُوا عَلَيْهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-16803

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16803. யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-19257

ஹதீஸின் தரம்: More Info

19257. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.


«إِنَّ الْمُخْتَلِعَاتِ وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19259

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19259. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) )

இதற்கு முன் உள்ள ஹதீஸ் ( எண் 19258) , இந்த ஹதீஸில் முழுமையான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

 


بِنَحْوِهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-19258

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : அபூ கிலாபா (ரஹ்)


«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ، لَمْ تُرَحْ رَائِحَةَ الْجَنَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-22174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22174. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ عَنْ غَرِيمٍ أَوْ مَجَاعَتِهِ عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-23017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23017.  “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


«مَنْ نَفَّسَ، عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11918. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் (அமர்ந்து) இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.

அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக்கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.


أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ، وَسَهْلَ بْنَ حُنَيْفٍ، كَانَا بِالْقَادِسِيَّةِ فَمَرَّتْ بِهِمَا جِنَازَةٌ فَقَامَا، فَقِيلَ لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ فَقَالَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ لَهُ: إِنَّهُ يَهُودِيٌّ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا؟»


Musannaf-Ibn-Abi-Shaybah-26575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26575. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்விடத்தில் பெரும் பாவங்களில் ஒன்று ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே எப்படி ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.


«إِنَّ أَكْبَرَ الذَّنْبِ عِنْدَ اللَّهِ، أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ»، قَالُوا: وَكَيْفَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»


Next Page » « Previous Page