Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-15703

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15703. …ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا يُوجِبُ الْحَجَّ؟ قَالَ: «زَادٌ وَرَاحِلَةٌ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الْحَاجُّ؟ قَالَ: «الشَّعِثُ التَّفِلُ»، قَالَ: فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا أَفْضَلُ الْحَجِّ؟ قَالَ: «الْعَجُّ وَالثَّجُّ»،

قَالَ: ” الْعَجُّ: الْعَجِيجُ بِالتَّلْبِيَةِ، وَالثَّجُّ: نَحْرُ الْبُدْنِ


Musannaf-Ibn-Abi-Shaybah-11815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11815. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தாம் அபீசீனியாவில் கண்ட, மாரியா உருவம் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً قَدْ رَأَتْهَا فِي أَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا: مَارِيَةَ فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمِ الْعَبْدُ الصَّالِحُ، أَوِ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7548

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7548. உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّهُمْ تَذَاكَرُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ، فَذَكَرَتْ أُمُّ سَلَمَةَ، أَوْ أُمُّ حَبِيبَةَ، كَنِيسَةً رَأَتْهَا فِي أَرْضِ الْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ كَانُوا إِذَا كَانَ فِيهِمِ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوهُ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-32597

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

32597. மணியும் நாயும்  இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْمَلَائِكَةُ لَا تَصْحَبُ رُفْقَةً فِيهَا جَرَسٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-32592

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

32592. மணியும் நாயும்  இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ وَلَا كَلْبٌ


Musannaf-Ibn-Abi-Shaybah-30341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

30341. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதி காலத்தில் இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றும். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«تَكُونُ فِي آخِرِ الزَّمَانِ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-29158

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

29158. ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தர்தா (ரஹ்) அவர்கள் ஸஃப்வான் (ரஹ்) அவர்களின் மனைவியாக இருந்தார் (என்பது குறிப்பிடத்தக்கது). ஸஃப்வான் கூறுகிறார்:

நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரஹ்) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காணமுடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரலி) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார்.

நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி)

وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ، فَأَتَاهَا فَوَجَدَ أُمَّ الدَّرْدَاءِ، وَلَمْ يَجِدْ أَبَا الدَّرْدَاءَ، فَقَالَتْ لَهُ: تُرِيدُ الْحَجَّ الْعَامَ؟ قَالَ: نَعَمْ، قَالَتْ: فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: ” إِنَّ دَعْوَةَ الْمَرْءِ مُسْتَجَابَةٌ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ يُؤَمِّنُ عَلَى دُعَائِهِ، كُلَّمَا دَعَا لَهُ بِخَيْرٍ قَالَ: آمِينَ، وَلَكَ بِمِثْلِهِ “، ثُمَّ خَرَجْتُ إِلَى السُّوقِ، فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ، فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ ذَلِكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-25387

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25387. …நானே அல்லாஹ். நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை) படைத்து அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


قَالَ اللَّهُ: أَنَا اللَّهُ، وَأَنَا الرَّحْمَنُ، وَهِيَ الرَّحِمُ، شَقَقْتُ لَهَا اسْمًا مِنِ اسْمِي، فَمَنْ وَصَلَهَا، وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-25394

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25394. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அது மறுமை நாளில் வந்து “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என அல்லாஹ்விடத்தில் முறையிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ , تَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ، تَقُولُ: يَا رَبِّ قُطِعْتُ، يَا رَبِّ ظُلِمْتُ، يَا رَبِّ , أُسِيءَ إِلَيَّ


Next Page » « Previous Page