Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-25388

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25388. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது) உறவானது, இறை அரியணையைப் பிடித்துக்கொண்டு, “என்னோடு ஒட்டி வாழ்பவனுடன் இறைவனும் உறவாடுவான். என்னை முறித்துக் கொள்பவனை இறைவனும் முறித்துக் கொள்வான்” என்று கூறியது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 


الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ، تَقُولُ: مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ اللَّهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-35071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

35071. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29442. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25719

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

25719. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிதோழர்கள் (சந்தித்துக் கொள்ளும்) போது முஸாஃபஹா செய்வார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)


«أَنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَافِحُ بَعْضُهُمْ بَعْضًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25718

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25718. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் சிலர் சிலரை சந்திக்கும் போது முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.


قُلْنَا: «يَا رَسُولَ اللَّهِ، أَيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟» قَالَ: «نَعَمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29170

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29170. உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)


مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ، وَلَا قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ، وَإِمَّا يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَكْشِفَ عَنْهُ السُّوءَ بِمِثْلِهَا “، قَالُوا: إِذًا نُكْثِرُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «اللَّهُ أَكْثَرُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

29162. “நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ، وَلَا يَقُلِ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللَّهَ لَا مُسْتَكْرِهَ لَهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-29167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

29167. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


«الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ»، ثُمَّ تَلَا {وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60] الْآيَةَ


Musannaf-Ibn-Abi-Shaybah-36371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

36371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு தடவையா ? ” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி)


رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَصَلَاةُ الصُّبْحِ مَرَّتَيْنِ؟ فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا , فَصَلَّيْتُهُمَا الْآنَ , فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musannaf-Ibn-Abi-Shaybah-6440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6440. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு தடவையா ? ” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி)


رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الصُّبْحِ مَرَّتَيْنِ» فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ، فَسَكَتَ


Next Page » « Previous Page