Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-7771

ஹதீஸின் தரம்: More Info

7771.  நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.

அவனது தொழுகையில் குறை இருந்தால், “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள் என்று கூறப்படும்

என தமீமுத் தாரி (ரலி) அவர்கள் கூறினார்கள்…


«إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الصَّلَاةُ، فَإِنْ أَتَمَّهَا وَإِلَّا قِيلَ انْظُرُوا أَلَهُ تَطَوُّعٌ، فَإِنْ كَانَ لَهُ تَطَوُّعٌ فَأَكْمِلُوا الْمَكْتُوبَةَ مِنَ التَّطَوُّعِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15053. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)


«جَاءَنِي جِبْرِيلُ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي يَرْفَعُونَ أَصْوَاتَهُمْ بِالْإِهْلَالِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25609

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25609. நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள். நான் அவனுக்கு ஒரு பேரித்தம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)


دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا، فَقَالَتْ: هَا تَعَالَ أُعْطِيكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيَهُ؟» قَالَتْ: تَمْرًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15674

ஹதீஸின் தரம்: More Info

15674. அக்ரவு பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும் இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، الْحَجُّ فِي كُلِّ عَامٍ أَوْ مَرَّةً وَاحِدَةً؟ قَالَ: «لَا بَلْ مَرَّةً وَاحِدَةً، فَمَنْ زَادَ فَتَطَوُّعٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3481

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3481. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்.

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)


«إِذَا بَلَغَ الْغُلَامُ سَبْعَ سِنِينَ فَمُرُوهُ بِالصَّلَاةِ، فَإِذَا بَلَغَ عَشْرًا فَاضْرِبُوهُ عَلَيْهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-3482

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3482. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அவர்களை அதற்காக அடியுங்கள். மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

 


«مُرُوا صِبْيَانَكَمْ بِالصَّلَاةِ إِذَا بَلَغُوا سَبْعًا، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا إِذَا بَلَغُوا عَشْرًا، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29414. உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: யுஸைரா (ரலி­)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ، وَالتَّكْبِيرِ، وَالتَّقْدِيسِ، وَاعْقُدْنَ بِالْأَنَامِلِ، فَإِنَّهُنَّ يَأْتِينَ يَوْمَ الْقِيَامَةِ مَسْئُولَاتٍ مُسْتَنْطَقَاتٍ، وَلَا تَغْفُلْنَ فَتَنْسَيْنَ مِنَ الرَّحْمَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-35038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

35038. உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: யுஸைரா (ரலி­)


قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّقْدِيسِ لَا تَغْفُلْنَ فَتَنْسَيْنَ الرَّحْمَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9763

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9763. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், (ரமளான் மாத நோன்புக்கு அடுத்து) மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَفْضَلِ الصِّيَامِ فَقَالَ: «صِيَامُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29858

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29858. ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. (அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா?

நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


كُنْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَقَدْتُهُ فَاتَّبَعْتُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، فَقَالَ: «يَا ابْنَةَ أَبِي بَكْرٍ أَحَسِبْتِ أَنَّ اللَّهَ يَحِيفُ عَلَيْكِ وَرَسُولُهُ، إِنَّ اللَّهَ يَنْزِلُ فِي هَذِهِ اللَّيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ فِيهَا مِنَ الذُّنُوبِ أَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ مَعْزِ كَلْبٍ»


Next Page » « Previous Page