கவிதை
4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
– மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா
رَدِفْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «هِيهْ» فَأَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ: «هِيهْ» ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا، فَقَالَ: «هِيهْ» حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ
– وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ جَمِيعًا، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، أَوْ يَعْقُوبَ بْنِ عَاصِمٍ، عَنِ الشَّرِيدِ قَالَ: أَرْدَفَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ فَذَكَرَ بِمِثْلِهِ
– وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ كِلَاهُمَا، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيِّ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ قَالَ: اسْتَنْشَدَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، وَزَادَ قَالَ: إِنْ كَادَ لِيُسْلِمُ وَفِي حَدِيثِ ابْنِ مَهْدِيٍّ قَالَ: «فَلَقَدْ كَادَ يُسْلِمُ فِي شِعْرِهِ»
Muslim-4539
4539. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 40
كَانَ ابْنُ عُمَرَ «إِذَا اسْتَجْمَرَ اسْتَجْمَرَ بِالْأَلُوَّةِ، غَيْرَ مُطَرَّاةٍ وَبِكَافُورٍ، يَطْرَحُهُ مَعَ الْأَلُوَّةِ» ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ يَسْتَجْمِرُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Muslim-4538
4538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில்,அது எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 40
«مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلَا يَرُدُّهُ، فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ»
Muslim-4537
4537. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறினார்கள். அப்போது “அவள் தனது மோதிரத்தி(ன் நடுக்குழியி)ல் கஸ்தூரியை இட்டு நிரப்பியிருந்தாள். கஸ்தூரி,நறுமணப் பொருட்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 40
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ، حَشَتْ خَاتَمَهَا مِسْكًا، وَالْمِسْكُ أَطْيَبُ الطِّيبِ
Muslim-4536
பாடம் : 5
கஸ்தூரியை உபயோகப்படுத்துவதும், அது நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும் என்பதும், நறுமணச் செடிகளையும் (மலர்களையும்) வாசனைத் திரவியங்களையும் (யாரேனும் அளித்தால் அதை) ஏற்க மறுப்பது வெறுக்கத்தக்கதாகும் என்பதும்.
4536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்லக்கூடியவளாய் இருந்தாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள்.) ஆகவே, அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாக தன்னை) ஆக்கிக் கொண்டாள்.
மேலும், தங்கத்தாலான மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரேயொரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. (அந்தக் குழியைத் தவிர வேறு துவாரங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.) பிறகு அவள் அக்குழிக்குள் கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். -கஸ்தூரி நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும்.- (இவ்வாறு செய்து கொண்ட) பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே «كَانَتِ امْرَأَةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ، قَصِيرَةٌ تَمْشِي مَعَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ، فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ، وَخَاتَمًا مِنْ ذَهَبٍ مُغْلَقٌ مُطْبَقٌ، ثُمَّ حَشَتْهُ مِسْكًا، وَهُوَ أَطْيَبُ الطِّيبِ، فَمَرَّتْ بَيْنَ الْمَرْأَتَيْنِ، فَلَمْ يَعْرِفُوهَا، فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا» وَنَفَضَ شُعْبَةُ يَدَهُ
Muslim-4535
4535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ” எனும் சொல்லைக் கூற வேண்டாம். (“என் மனம் கனத்துவிட்டது” எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ”எனும் சொல்லையே கூறட்டும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 40
«لَا يَقُلْ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلْيَقُلْ لَقِسَتْ نَفْسِي»
Muslim-4534
பாடம் : 4
(மனக் குழப்பத்திலுள்ள) ஒரு மனிதர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ”எனும் சொல்லை ஆள்வது வெறுக்கத்தக்கதாகும்.
4534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது” எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ” எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (“என் மனம் கனத்துவிட்டது” எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ” எனும் சொல்லையே கூறட்டும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “மாறாக” எனும் சொல் இடம்பெறவில்லை.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي» هَذَا حَدِيثُ أَبِي كُرَيْبٍ وقَالَ: أَبُو بَكْرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ «لَكِنْ»
– وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، بِهَذَا الْإِسْنَادِ
Muslim-4533
4533. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் “ரப்பு”க்கு (அதிபதிக்கு) பருகத் தண்ணீர் கொடு. உன் “ரப்பு”க்கு உணவு கொடு. உன் “ரப்பு”க்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு” என்று கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) “ரப்பீ” என்று கூற வேண்டாம். மாறாக, “சய்யிதீ”, “மவ்லாய” என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண்டாம். மாறாக, “ஃபத்தாய” (என் பணியாள்) “ஃபத்தாத்தீ” (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.
Book : 40
«لَا يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ، أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، وَلَا يَقُلْ أَحَدُكُمْ رَبِّي، وَلْيَقُلْ سَيِّدِي مَوْلَايَ، وَلَا يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي، وَلْيَقُلْ فَتَايَ فَتَاتِي غُلَامِي»
Muslim-4532
4532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் (தம் அடிமையை) “அப்தீ” என்று கூற வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே! மாறாக, “ஃபத்தாய” (என் பணியாளரே) என்று அழைக்கட்டும். அடிமை தன் (உரிமையாளரை) “ரப்பீ” (என் அதிபதியே!) என்று சொல்ல வேண்டாம். மாறாக, “சய்யிதீ” (என் தலைவரே!) என்று அழைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்), அஃமஷ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “அடிமை தன் உரிமையாளரை “மவ்லாய” (எசமானே!) என்று அழைக்க வேண்டாம்” என்று காணப்படுகிறது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஏனெனில், அல்லாஹ்வே உங்கள் “மவ்லா” (எசமான்) ஆவான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
Book : 40
لَا يَقُولَنَّ أَحَدُكُمْ: عَبْدِي، فَكُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَلَكِنْ لِيَقُلْ: فَتَايَ، وَلَا يَقُلِ الْعَبْدُ: رَبِّي، وَلَكِنْ لِيَقُلْ: سَيِّدِي
– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلَاهُمَا عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ، وَفِي حَدِيثِهِمَا وَلَا يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ مَوْلَايَ وَزَادَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ فَإِنَّ مَوْلَاكُمُ اللهُ عَزَّ وَجَلَّ
Muslim-4531
பாடம் : 3
(அடிமைக்கும் அடிமைப் பெண்ணுக்கும் முறையே) “அப்த்”, “அமத்” ஆகிய சொற்களையும் (அடிமையின் உரிமையாளருக்கு) “மவ்லா”, “சய்யித்” ஆகிய சொற்களையும் ஆள்வது தொடர்பான சட்டம்.
4531. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் (தம் அடிமையை அடிமையே, அடிமைப் பெண்ணே எனும் பொருள் கொண்ட) அப்தீ, அமத்தீ எனும் சொல்லால் அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை (அப்து)களே;உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை (அமத்)களே. மாறாக, ஃகுலாமீ, ஜாரியத்தீ, ஃபத்தாய,ஃபத்தாத்தீ ஆகிய சொற்களால் அழைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 40
«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي كُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللهِ، وَلَكِنْ لِيَقُلْ غُلَامِي وَجَارِيَتِي وَفَتَايَ وَفَتَاتِي»
சமீப விமர்சனங்கள்