Category: முஸ்லிம்

Muslim-4059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4059. ஜபலா பின் சஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹன்த்தமா”வைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். நான் “ஹன்த்தமா என்பது என்ன?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “சுட்ட களிமண் பாத்திரம்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمَةِ»، فَقُلْتُ: مَا الْحَنْتَمَةُ؟ قَالَ: «الْجَرَّةُ»


Muslim-4058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4058. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள். (மாறாக) “தோல் பைகளில் பானங்களை ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 36


نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ، وَقَالَ: «انْتَبِذُوا فِي الْأَسْقِيَةِ»


Muslim-4057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண் சாடி, சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து (ஓரிரு முறை அல்ல) பலமுறை செவியுற்றுள்ளேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், இப்னு உமர் (ரலி) அவர்கள் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

Book : 36


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ»، قَالَ: سَمِعْتُهُ غَيْرَ مَرَّةٍ

– وحَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، قَالَ: وَأُرَاهُ قَالَ: وَالنَّقِيرِ


Muslim-4056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4056. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36


كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ، فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: أَنَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ؟ قَالَ: «نَعَمْ»


Muslim-4055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4055. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்காய் குடுவை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

Book : 36


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ»


Muslim-4054

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4054. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரம்,சுரைக்காய் குடுவை ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36


أَنَّ رَجُلًا جَاءَهُ، فَقَالَ: أَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنْبَذَ فِي الْجَرِّ وَالدُّبَّاءِ؟ قَالَ: «نَعَمْ»


Muslim-4053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4053. ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்தார்களா?” என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் “அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.

– தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

قُلْتُ لِابْنِ عُمَرَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ؟، قَالَ: فَقَالَ: «قَدْ زَعَمُوا ذَاكَ»، قُلْتُ: أَنَهَى عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «قَدْ زَعَمُوا ذَاكَ»

– حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ: أَنَهَى نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ؟ قَالَ: «نَعَمْ»، ثُمَّ قَالَ طَاوُسٌ: «وَاللهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ»