Category: முஸ்லிம்

Muslim-2535

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61

(ஹஜ்ஜில் அறுக்கப்படும்) பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகியவற்றைத் தர்மம் செய்ய வேண்டும்.

2535. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உரிப்பவருக்குரிய கூலி பற்றிய குறிப்பு இல்லை.

Book : 15


«أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ أَتَصَدَّقَ بِلَحْمِهَا وَجُلُودِهَا وَأَجِلَّتِهَا، وَأَنْ لَا أُعْطِيَ الْجَزَّارَ مِنْهَا»، قَالَ: «نَحْنُ نُعْطِيهِ مِنْ عِنْدِنَا»

– وحَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالُوا: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ. وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُفْيَانُ، وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، كِلَاهُمَا عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا أَجْرُ الْجَازِرِ


Muslim-2534

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2534. பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, “உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, “நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!” என்று (எங்களைப் பாராட்டிக்)

كُنْتُ جَالِسًا مَعَ ابْنِ عَبَّاسٍ عِنْدَ الْكَعْبَةِ، فَأَتَاهُ أَعْرَابِيٌّ فَقَالَ: مَا لِي أَرَى بَنِي عَمِّكُمْ يَسْقُونَ الْعَسَلَ وَاللَّبَنَ وَأَنْتُمْ تَسْقُونَ النَّبِيذَ؟ أَمِنْ حَاجَةٍ بِكُمْ أَمْ مِنْ بُخْلٍ؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: الْحَمْدُ لِلَّهِ، مَا بِنَا مِنْ حَاجَةٍ وَلَا بُخْلٍ، قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَخَلْفَهُ أُسَامَةُ، فَاسْتَسْقَى فَأَتَيْنَاهُ بِإِنَاءٍ مِنْ نَبِيذٍ فَشَرِبَ، وَسَقَى فَضْلَهُ أُسَامَةَ، وَقَالَ: «أَحْسَنْتُمْ وَأَجْمَلْتُمْ، كَذَا فَاصْنَعُوا» فَلَا نُرِيدُ تَغْيِيرَ مَا أَمَرَ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-2533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60

“அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயம் ஆகும்; (ஹாஜிகளுக்கு) தண்ணீர் விநியோகிப்போர் அ(ங்கு தங்குவ)தைத் தவிர்க்க அனுமதி உண்டு.

2533. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


«أَنَّ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، اسْتَأْذَنَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِي مِنًى، مِنْ أَجْلِ سِقَايَتِهِ، فَأَذِنَ لَهُ»

– وحَدَّثَنَاه إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ مُحَمَّدِ بْنِ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، كِلَاهُمَا عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-2532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2532. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நமக்கு (மக்கா) வெற்றியளித்தால் இன்ஷா அல்லாஹ் (நாளை) நாம் குறைஷியர் “நாங்கள் இறை மறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்துக்கொண்ட (“அல்முஹஸ்ஸப்” எனும்) இடத்தில் தங்குவோம்” என்று கூறினார்கள்.

Book : 15


«مَنْزِلُنَا إِنْ شَاءَ اللهُ، إِذَا فَتَحَ اللهُ الْخَيْفُ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ»


Muslim-2531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2531. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (“விடைபெறும்” ஹஜ்ஜில்) மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை நாம் பனூ கினானா -அதாவது அல்முஹஸ்ஸப்- பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் “நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்தனர்.

அதன் விவரம் வருமாறு: குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காதவரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தனர்.

Book : 15


قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ بِمِنًى: «نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ» وَذَلِكَ إِنَّ قُرَيْشًا وَبَنِي كِنَانَةَ تَحَالَفَتْ عَلَى بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ أَنْ لَا يُنَاكِحُوهُمْ وَلَا يُبَايِعُوهُمْ، حَتَّى يُسْلِمُوا إِلَيْهِمْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي بِذَلِكَ، الْمُحَصَّبَ


Muslim-2530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2530. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்லத் திட்டமிட்டபோது) “அல்லாஹ் நாடினால் நாளை நாம் “பனூ கினானா” பள்ளத்தாக்கில் (அல்முஹஸ்ஸபில்) தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் “நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்” என்று சூளுரைத்தனர்” என்று கூறினார்கள்.

Book : 15


«نَنْزِلُ غَدًا، إِنْ شَاءَ اللهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ»


Muslim-2529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2529. (நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை) அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது “அல்அப்தஹ்” எனுமிடத்தில் இறங்கித் தங்குமாறு என்னைப் பணிக்கவில்லை. நானாகச் சென்று அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூடாரத்தை அமைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அங்கு தங்கினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அபூராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பயணச்சாமான்களைக் கொண்டுசென்றார்கள்” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

Book : 15


«لَمْ يَأْمُرْنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْزِلَ الْأَبْطَحَ حِينَ خَرَجَ مِنْ مِنًى، وَلَكِنِّي جِئْتُ فَضَرَبْتُ فِيهِ قُبَّتَهُ، فَجَاءَ فَنَزَلَ» قَالَ أَبُو بَكْرٍ: فِي رِوَايَةِ صَالِحٍ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، وَفِي رِوَايَةِ قُتَيْبَةَ، قَالَ: عَنْ أَبِي رَافِعٍ وَكَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-2528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2528. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்முஹஸ்ஸப்” என்ற இடத்தில் தங்குவது (ஹஜ்ஜின் கிரியைகளில்) எதுவுமில்லை. அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கிய ஓர் இடம்; அவ்வளவுதான். – இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-2527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2527. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் “அல்அப்தஹ்” எனும் இடத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா (ரஹ்) அவர்கள் என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் அங்கு தங்கமாட்டார்கள். மேலும் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம், அது (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியான இடமாக அமைந்திருந்ததுதான்” என்றும் கூறினார்கள்.

Book : 15


أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَابْنَ عُمَرَ كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ. قَالَ الزُّهْرِيُّ: وَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا لَمْ تَكُنْ تَفْعَلُ ذَلِكَ، وَقَالَتْ: «إِنَّمَا نَزَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِأَنَّهُ كَانَ مَنْزِلًا أَسْمَحَ لِخُرُوجِهِ»


Muslim-2526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்அப்தஹ்” எனும் இடத்தில் தங்குவது நபிவழியன்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம்,அந்த இடம் (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு வசதியாக அமைந்திருந்ததுதான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


«نُزُولُ الْأَبْطَحِ لَيْسَ بِسُنَّةٍ، إِنَّمَا نَزَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِأَنَّهُ كَانَ أَسْمَحَ لِخُرُوجِهِ إِذَا خَرَجَ»

– وحَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، ح وحَدَّثَنِيهِ أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وحَدَّثَنَاه أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Next Page » « Previous Page