Category: முஸ்லிம்

Muslim-2525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் “அல்முஹஸ் ஸப்” என்ற இடத்தில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள்; “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்ஹஸ்பா” வில் (அல்முஹஸ்ஸப்) லுஹ்ர் தொழுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர்.

Book : 15


أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَرَى التَّحْصِيبَ سُنَّةً، وَكَانَ يُصَلِّي الظُّهْرَ يَوْمَ النَّفْرِ بِالْحَصْبَةِ، قَالَ نَافِعٌ: «قَدْ حَصَّبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْخُلَفَاءُ بَعْدَهُ»


Muslim-2524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59

(மினாவிலிருந்து புறப்படும்) “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்முஹஸ்ஸபி”ல் தங்குவதும், அங்கு தொழுவதும் விரும்பத்தக்கதாகும்.

2524. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்அப்தஹ்” எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.

Book : 15


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ»


Muslim-2523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2523. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தர்வியா”வுடைய (துல்ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மினாவில்” என்று பதிலளித்தார்கள். நான், “(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்அப்தஹ் எனுமிடத்தில்” என்று பதிலளித்துவிட்டு, பிறகு “உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்து கொள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

Book : 15


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قُلْتُ: أَخْبِرْنِي عَنْ شَيْءٍ عَقَلْتَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: بِمِنًى، قُلْتُ: فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: بِالْأَبْطَحِ، ثُمَّ قَالَ: افْعَلْ مَا يَفْعَلُ أُمَرَاؤُكَ


Muslim-2522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

துல்ஹஜ் பத்தாவது நாளில் “தவாஃபுல் இஃபாளா” செய்வது விரும்பத்தக்கதாகும்.

2522. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் “தவாஃபுல் இஃபாளா”ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.

இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்களும் “நஹ்ரு” டைய நாளில் “தவாஃபுல் இஃபாளா”ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுவார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.

Book : 15


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفَاضَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ رَجَعَ فَصَلَّى الظُّهْرَ بِمِنًى» قَالَ نَافِعٌ: «فَكَانَ ابْنُ عُمَرَ يُفِيضُ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْجِعُ فَيُصَلِّي الظُّهْرَ بِمِنًى وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ»


Muslim-2521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாவது நாளில் நிறைவேற்ற வேண்டிய கிரியைகளான) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது “குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)” என்று விடையளித்தார்கள்.

Book : 15


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ: فِي الذَّبْحِ، وَالْحَلْقِ، وَالرَّمْيِ، وَالتَّقْدِيمِ، وَالتَّأْخِيرِ، فَقَالَ: «لَا حَرَجَ»


Muslim-2520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2520. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நஹ்ரு”டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் “ஜம்ரத்துல் அகபா”விற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!”என்றார்கள். மற்றொரு மனிதர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். இன்னொரு மனிதர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து) விட்டேன்” என்றார். அதற்கு, “குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்”என்றே விடையளித்ததை நான் கண்டேன்.

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَتَاهُ رَجُلٌ يَوْمَ النَّحْرِ وَهُوَ وَاقِفٌ عِنْدَ الْجَمْرَةِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، فَقَالَ: «ارْمِ وَلَا حَرَجَ» وَأَتَاهُ آخَرُ فَقَالَ: إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «ارْمِ وَلَا حَرَجَ» وَأَتَاهُ آخَرُ، فَقَالَ: إِنِّي أَفَضْتُ إِلَى الْبَيْتِ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «ارْمِ وَلَا حَرَجَ» قَالَ: فَمَا رَأَيْتُهُ سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ، إِلَّا قَالَ «افْعَلُوا وَلَا حَرَجَ»


Muslim-2519

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2519. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார்” என ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 15


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَةٍ بِمِنًى، فَجَاءَهُ رَجُلٌ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ


Muslim-2518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2518. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். அவர், “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்” என்றார். அதற்கும் “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «فَاذْبَحْ وَلَا حَرَجَ» قَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «ارْمِ وَلَا حَرَجَ»


Muslim-2517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2517. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள “இம்மூன்று விஷயங்களை” என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன; “இம்மூன்று விஷயங்களை” எனும் வாசகம் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

யஹ்யா அல்உமவீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Book : 15


وحَدَّثَنَاه عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ح وحَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ أَمَّا رِوَايَةُ ابْنِ بَكْرٍ فَكَرِوَايَةِ عِيسَى، إِلَّا قَوْلَهُ: لِهَؤُلَاءِ الثَّلَاثِ، فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ذَلِكَ، وَأَمَّا يَحْيَى الْأُمَوِيُّ فَفِي رِوَايَتِهِ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ وَأَشْبَاهُ ذَلِكَ


Muslim-2516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2516. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “நஹ்ரு”டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து) நின்று, “நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்க வில்லை” என்றார். பிறகு மற்றொரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன் எனக்கூறி, (கல்லெறிதல், பலிப்பிராணியை அறுத்தல், தலைமுடி களையுதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

Book : 15


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ النَّحْرِ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ: مَا كُنْتُ أَحْسِبُ، يَا رَسُولَ اللهِ، أَنَّ كَذَا وَكَذَا، قَبْلَ كَذَا وَكَذَا، ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا، قَبْلَ كَذَا وَكَذَا، لِهَؤُلَاءِ الثَّلَاثِ، قَالَ: «افْعَلْ وَلَا حَرَجَ»


Next Page » « Previous Page