Category: முஸ்லிம்

Muslim-2376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2376. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் உம்ராவிற்காக (மக்கா நகருக்கு) வந்து இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே “சயீ” செய்யவில்லை. இந்நிலையில், அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபடலாமா?)” என்று கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ، فَطَافَ بِالْبَيْتِ وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ؟ فَقَالَ: «قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ»

– حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، ح وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، جَمِيعًا عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ


Muslim-2375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2375. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நான் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவுடன், இறையில்லம் கஅபாவைச் சுற்றி வரலாமா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “(அவ்வாறு கஅபாவைச் சுற்றிவர) உமக்கு என்ன தடை?”என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “இன்ன மனிதரின் புதல்வர் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதை நான் கண்டேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர்.(பஸ்ராவின் ஆளுநரான) அவரை உலகம் சோதித்துவிட்டிருக்கிறது” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நம்மில் யாரைத்தான்” அல்லது “உங்களில் யாரைத் தான்” இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?” என்று கூறிவிட்டுப் பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவுடன் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி (சயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம். நீர் (ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், அல்லாஹ்வின் நெறியையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் பின்பற்றுவதே

سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَطُوفُ بِالْبَيْتِ وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ؟ فَقَالَ: وَمَا يَمْنَعُكَ؟ قَالَ: إِنِّي رَأَيْتُ ابْنَ فُلَانٍ يَكْرَهُهُ وَأَنْتَ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ، رَأَيْنَاهُ قَدْ فَتَنَتْهُ الدُّنْيَا، فَقَالَ: وَأَيُّنَا – أَوْ أَيُّكُمْ – لَمْ تَفْتِنْهُ الدُّنْيَا؟ ثُمَّ قَالَ: «رَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْرَمَ بِالْحَجِّ، وَطَافَ بِالْبَيْتِ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ»، فَسُنَّةُ اللهِ وَسُنَّةُ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تَتَّبِعَ مِنْ سُنَّةِ فُلَانٍ، إِنْ كُنْتَ صَادِقًا


Muslim-2374

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்” கட்டியவர், மக்காவிற்கு வந்ததும் தவாஃபும் சயீயும் செய்வது அவசியம்.

2374. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரியா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (சரிதான்)” என்றார்கள். அதற்கு அந்த மனிதர், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நீ அரஃபா செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே!” எனக் கூறுகின்றாரே?” என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் “அரஃபா” செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (ஒரு முஸ்லிம்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின்

كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ، فَقَالَ: نَعَمْ، فَقَالَ: فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: لَا تَطُفْ بِالْبَيْتِ حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ، فَقَالَ ابْنُ عُمَرَ: «فَقَدْ حَجَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ» فَبِقَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ تَأْخُذَ، أَوْ بِقَوْلِ ابْنِ عَبَّاسٍ إِنْ كُنْتَ صَادِقًا


Muslim-2373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2373. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்” என்றார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் “நாங்கள் சிறுவர்களாகவே இருந்தோம் போலும்” என்றார்கள்.

அத்தியாயம்: 15


أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَمَعَ بَيْنَهُمَا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ» قَالَ: فَسَأَلْتُ ابْنَ عُمَرَ، فَقَالَ: «أَهْلَلْنَا بِالْحَجِّ» فَرَجَعْتُ إِلَى أَنَسٍ فَأَخْبَرْتُهُ مَا قَالَ ابْنُ عُمَرَ، فَقَالَ: «كَأَنَّمَا كُنَّا صِبْيَانًا»


Muslim-2372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2372. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். நான் அ(வ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிய)தை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்” என்றார்கள். பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போது அனஸ் (ரலி) அவர்கள், “நம்மை நீங்கள் சிறுவர்களாகவே எண்ணுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்” (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அத்தியாயம்: 15


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُلَبِّي بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا» قَالَ بَكْرٌ: فَحَدَّثْتُ بِذَلِكَ ابْنَ عُمَرَ، فَقَالَ: «لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ» فَلَقِيتُ أَنَسًا فَحَدَّثْتُهُ بِقَوْلِ ابْنِ عُمَرَ، فَقَالَ أَنَسٌ: مَا تَعُدُّونَنَا إِلَّا صِبْيَانًا، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا»


Muslim-2371

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதும் (கிரான்), ஹஜ்ஜை மட்டும் தனியாகச் செய்வதும் (இஃப்ராத்).

2371. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (“விடைபெறும்” ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு மட்டும் (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொன்னோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொன்னார்கள்” என இடம் பெற்றுள்ளது.

Book : 15


«أَهْلَلْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ مُفْرَدًا، – وَفِي رِوَايَةِ ابْنِ عَوْنٍ – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّ بِالْحَجِّ مُفْرَدًا»


Muslim-2370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2370. மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்” என்று சொல்லப்பட்டபோது, “அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று செய்வேன்” என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது; ஹதீஸின் இறுதியில் “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்”என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 15


حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ، كِلَاهُمَا عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، بِهَذِهِ الْقِصَّةِ وَلَمْ يَذْكُرِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا فِي أَوَّلِ الْحَدِيثِ حِينَ قِيلَ لَهُ يَصُدُّوكَ عَنِ الْبَيْتِ، قَالَ: إِذَنْ أَفْعَلَ كَمَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ فِي آخِرِ الْحَدِيثِ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا ذَكَرَهُ اللَّيْثُ


Muslim-2369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2369. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகையிட்டிருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர்மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப்பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறியபடி புறப்பட்டார்கள். “பைதாஉ” எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், “(தடுக்கப்படும் விஷயத்தில்) ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றே. நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். (இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என இடம் பெற்றுள்ளது). மேலும், “குதைத்” எனுமிடத்தில்

أَنَّ ابْنَ عُمَرَ، أَرَادَ الْحَجَّ عَامَ نَزَلَ الْحَجَّاجُ بِابْنِ الزُّبَيْرِ، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ، فَقَالَ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ} [الأحزاب: 21] حَسَنَةٌ ” أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً، ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ الْبَيْدَاءِ، قَالَ: مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلَّا وَاحِدٌ، اشْهَدُوا – قَالَ ابْنُ رُمْحٍ: أُشْهِدُكُمْ – أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجًّا مَعَ عُمْرَتِي، وَأَهْدَى هَدْيًا اشْتَرَاهُ بِقُدَيْدٍ، ثُمَّ انْطَلَقَ يُهِلُّ بِهِمَا جَمِيعًا، حَتَّى قَدِمَ مَكَّةَ، فَطَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلَمْ يَنْحَرْ، وَلَمْ يَحْلِقْ، وَلَمْ يُقَصِّرْ، وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ، حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ فَنَحَرَ وَحَلَقَ، وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَ الْحَجِّ وَالْعُمْرَةِ بِطَوَافِهِ الْأَوَّلِ “. وَقَالَ ابْنُ عُمَرَ: «كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-2368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2368. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், “இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. மக்களிடையே (உள்நாட்டுப்)போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினர்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அங்கு செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, குறைஷி இறைமறுப்பாளர்கள் அவர்களைக் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச்

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ اللهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللهِ، كَلَّمَا عَبْدَ اللهِ حِينَ نَزَلَ الْحَجَّاجُ لِقِتَالِ ابْنِ الزُّبَيْرِ، قَالَا: لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ، فَإِنَّا نَخْشَى أَنْ يَكُونَ بَيْنَ النَّاسِ قِتَالٌ يُحَالُ بَيْنَكَ وَبَيْنَ الْبَيْتِ، قَالَ: ” فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، حِينَ حَالَتْ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً، فَانْطَلَقَ حَتَّى أَتَى ذَا الْحُلَيْفَةِ فَلَبَّى بِالْعُمْرَةِ، ثُمَّ قَالَ: إِنْ خُلِّيَ سَبِيلِي قَضَيْتُ عُمْرَتِي، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، ثُمَّ تَلَا: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]، ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ بِظَهْرِ الْبَيْدَاءِ قَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْعُمْرَةِ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْحَجِّ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَةٍ، فَانْطَلَقَ حَتَّى ابْتَاعَ بِقُدَيْدٍ هَدْيًا، ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ لَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ مِنْهُمَا بِحَجَّةٍ يَوْمَ النَّحْرِ

– وحَدَّثَنَاه ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ نَافِعٍ، قَالَ: أَرَادَ ابْنُ عُمَرَ الْحَجَّ حِينَ نَزَلَ الْحَجَّاجُ بِابْنِ الزُّبَيْرِ، وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ، وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ: وَكَانَ يَقُولُ: مَنْ جَمَعَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ كَفَاهُ طَوَافٌ وَاحِدٌ وَلَمْ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا


Muslim-2367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

(ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாமல் எதிரிகளால்) தடுக்கப்பட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்; ஒரே இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (கிரான்) செய்யலாம் என்பதன் விளக்கம்.

2367. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் முற்றுகை யிட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா சம்பவத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறி விட்டு, உம்ராவிற்காக (“இஹ்ராம்” கட்டி) தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள். “பைதாஉ” எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, “(தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில் ஹஜ், உம்ரா ஆகிய) அவையிரண்டும் ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، خَرَجَ فِي الْفِتْنَةِ مُعْتَمِرًا وَقَالَ: ” إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ فَأَهَلَّ بِعُمْرَةٍ وَسَارَ، حَتَّى إِذَا ظَهَرَ عَلَى الْبَيْدَاءِ الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ، فَخَرَجَ حَتَّى إِذَا جَاءَ الْبَيْتَ طَافَ بِهِ سَبْعًا، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، سَبْعًا. لَمْ يَزِدْ عَلَيْهِ، وَرَأَى أَنَّهُ مُجْزِئٌ عَنْهُ، وَأَهْدَى


Next Page » « Previous Page