Category: முஸ்லிம்

Muslim-2366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2366. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் “விடைபெறும்” ஹஜ் ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்துவிட்டு) உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், “நீங்கள் ஏன் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து) எனது பலிப்பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَزْوَاجَهُ أَنْ يَحْلِلْنَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ: مَا يَمْنَعُكَ أَنْ تَحِلَّ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ هَدْيِي»


Muslim-2365

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2365. மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், மேற்கண்ட ஹதீஸில் (2363) உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.

Book : 15


يَا رَسُولَ اللهِ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ «فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


Muslim-2364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2364. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். மேலும், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். ஆகவே, நான் ஹஜ் செய்து முடிக்காத வரை இஹ்ராமிலிருந்து விடு படமாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

Book : 15


قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحِلَّ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي قَلَّدْتُ هَدْيِي، وَلَبَّدْتُ رَأْسِي، فَلَا أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنَ الْحَجِّ»


Muslim-2363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர் (முஃப்ரித்) இஹ்ராமிலிருந்து விடுபடுகின்ற நேரததில்தான் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து “இஹ்ராம்”கட்டியவரும் (காரின்) இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

2363. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும்போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

أَنَّ حَفْصَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ»

– وحَدَّثَنَاه ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ رَضِيَ اللهُ عَنْهُمْ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا لَكَ لَمْ تَحِلَّ بِنَحْوِهِ