Category: முஸ்னத் அஹ்மத்
Musnad-Ahmad
Musnad-Ahmad-7461
7461. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى شَيْءٍ، فَإِنْ لَمْ يَكُنْ شَيْءٌ فَعَصًا، وَإِنْ لَمْ يَكُنْ عَصًا، فَلْيَخْطُطْ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»
Musnad-Ahmad-7392
7392. அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا، فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا، فَلْيَخُطَّ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»
Musnad-Ahmad-27403
27403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
«مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
Musnad-Ahmad-26772
26772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَ الظُّهْرِ، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
Musnad-Ahmad-26764
26764. ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இந்த பதட்டம் ஏன்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது,
“லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றதிலிருந்து அவைகளை நான் விடவில்லை. (தற்போது விடவேண்டியது ஏற்பட்டுள்ளதே என்பதால் பதட்டமாக உள்ளேன்) என்று கூறினார்.
لَمَّا نَزَلَ بِعَنْبَسَةَ بْنَ أَبِي سُفْيَانَ، الْمَوْتُ اشْتَدَّ جَزَعُهُ، فَقِيلَ لَهُ: مَا هَذَا الْجَزَعُ؟ قَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ، يَعْنِي أُخْتَهُ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ» . فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ
Musnad-Ahmad-8666
8666. நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்துச் சென்றார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَّ بِجِدَارٍ أَوْ حَائِطٍ مَائِلٍ، فَأَسْرَعَ الْمَشْيَ، فَقِيلَ لَهُ: فَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»
Musnad-Ahmad-17818
17818. அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.
-அறிவிப்பாளர் மாலிக் பின் அப்துல்லாஹ் , வேறுஇடத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) யிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.
أَنَّهُ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ، مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ
Musnad-Ahmad-6594
6594. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: مَوْتِ الْفُجَاءَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنَ السَّبُعِ، وَمِنَ الْحَرَقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ، أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ
சமீப விமர்சனங்கள்