Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-10312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10312. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فَمَا يُسْتَجَابُ لِي


Musnad-Ahmad-11980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11980. “நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ، وَلَا يَقُلْ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللَّهَ لَا مُسْتَكْرِهَ لَهُ


Musnad-Ahmad-18437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18437. ( பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’)என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்…)

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி) 

 

ஹதீஸ் எண்-18436 ல் வரும் மேற்கண்ட இதே செய்தி வேறு இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

 


فَذَكَرَ نَحْوَهُ

كَذَا قَالَ شُعْبَةُ مِثْلَهُ،


Musnad-Ahmad-18436

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18436. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’) என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்…

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ، وَيَقُولُ: «إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ، ثُمَّ قَرَأَ، {وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60]


Musnad-Ahmad-18432

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18432. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’) என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


«إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ، ثُمَّ قَرَأَ: {وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60]


Musnad-Ahmad-18386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18386. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


«إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ، ثُمَّ قَرَأَ: {وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60]


Musnad-Ahmad-23760

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23760. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு தடவையா ? ” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி)


رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَاةُ الصُّبْحِ مَرَّتَيْنِ؟» فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا، فَصَلَّيْتُهُمَا الْآنَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-16954

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16954. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.

அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்…

அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி)


أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاةُ، فَإِنْ كَانَ أَكْمَلَهَا كُتِبَتْ لَهُ كَامِلَةً، وَإِنْ لَمْ يَكُنْ أَكْمَلَهَا قَالَ لِلْمَلَائِكَةِ: انْظُرُوا هَلْ تَجِدُونَ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ، فَأَكْمِلُوا بِهَا مَا ضَيَّعَ مِنْ فَرِيضَتِهِ، ثُمَّ الزَّكَاةُ، ثُمَّ تُؤْخَذُ  الْأَعْمَالُ عَلَى حَسَبِ ذَلِكَ


Musnad-Ahmad-19812

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, “சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க

(யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)”

என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி)


لَمَّا كَانَ بِآخِرَةٍ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الْمَجْلِسِ، فَأَرَادَ أَنْ يَقُومَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ. أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَقُولُ الْآنَ كَلَامًا مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا خَلَا. قَالَ: «هَذَا كَفَّارَةُ مَا يَكُونُ فِي الْمَجْلِسِ»


Musnad-Ahmad-25322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25322. அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும், உம்ராவும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


يَا رَسُولَ اللَّهِ، هَلْ عَلَى النِّسَاءِ مِنْ جِهَادٍ؟ قَالَ: ” نَعَمْ، عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: الْحَجُّ وَالْعُمْرَةُ “


Next Page » « Previous Page