Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-21692

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21692. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَنَّهُ سَجَدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، مِنْهُنَّ النَّجْمُ»


Musnad-Ahmad-7639

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது;  தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது அல்லாஹ், வானவர்களிடம் “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் மஃமர் கூறினார்:

ஸுஹைலைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் “ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் (ஆதமுடைய மக்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக்காட்டப்படும் என்று அறிவிக்கின்றனர்.


تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ – قَالَ مَعْمَرٌ: وَقَالَ غَيْرُ سُهَيْلٍ – وَتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا، إِلَّا الْمُتَشَاحِنَيْنِ، يَقُولُ اللَّهُ لِلْمَلَائِكَةِ: ذَرُوهُمَا حَتَّى يَصْطَلِحَا


Musnad-Ahmad-2346

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2346. நபி (ஸல்) அவர்கள், ரஜப் மாதம் வந்துவிட்டால், “அல்லாஹ்வே! ரஜபிலும், ஷஃபானிலும் எங்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும், ரமளானிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.

மேலும், “வெள்ளிக்கிழமையின் இரவு பிரபலமானதாகும்; அதனுடைய பகல், ஒளிவீசக்கூடியதாகும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ»

وَكَانَ يَقُولُ: «لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ، وَيَوْمُهَا أَزْهَرُ»


Musnad-Ahmad-13668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13668. “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது. எனவே (அந்த நேரங்களில்) நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ، فَادْعُوا»


Musnad-Ahmad-13357

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13357. “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது. எனவே (அந்த நேரங்களில்) நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«الدَّعْوَةُ لَا تُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ، فَادْعُوا»


Musnad-Ahmad-12584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12584. “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது. எனவே (அந்த நேரங்களில்) நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ، فَادْعُوا»


Musnad-Ahmad-12200

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

12200.

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ»


musnad abdu bin humaid-783

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

783. ..என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்…


«مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»


Musnad-Ahmad-10178

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10178. யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَدْعُ اللَّهَ، غَضِبَ اللَّهُ عَلَيْهِ»


Musnad-Ahmad-9719

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9719. யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَدْعُ اللَّهَ، غَضِبَ اللَّهُ عَلَيْهِ»


Next Page » « Previous Page