Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-1444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1444.


أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ لَمْ يَكُنْ يَسْأَلُهُ أَحَدٌ مِنْ أَهْلِهِ عَقِيقَةً، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهَا، وَكَانَ يَعُقُّ عَن وَلَدِهِ بِشَاةٍ شَاةٍ، عَنِ الذُّكُورِ وَالإِنَاثِ.


Muwatta-Malik-2853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2853. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவரிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவர் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ، فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلاً أَعْطَاهُ اللهُ مِنْ فَضْلِهِ، فَيَسْأَلَهُ أَعْطَاهُ أَوْ مَنَعَهُ.


Muwatta-Malik-2861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 89

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள்.

2861. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

1 . நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
2 . நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
3 . நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
4 . நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
5 . நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي، الَّذِي يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ، الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ.


Muwatta-Malik-2171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 26

பயன்பாடுகளில் தீர்ப்பளித்தல்.

2171. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

அறிவிப்பவர்: யஹ்யா பின் உமாரா (ரஹ்)


لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ.


Muwatta-Malik-2635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2635. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்


أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: دَعْهُ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ.


Muwatta-Malik-2781

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2781. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று ஒரு முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவர் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرُ مَالِ الْمُسْلِمِ غَنَمًا، يَتْبَعُ بِهَا شُعُبَ الْجِبَالِ، وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ.


Muwatta-Malik-2677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2677. அபுல்முஸன்னா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், மர்வான் பின் ஹகம் அவர்களிடம் இருந்தபோது அபூஸயீத் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவரிடம் மர்வான் அவர்கள், பானத்தில் மூச்சுவிடுவதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்ற செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டுள்ளீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி) அவர்கள், “ஆம். கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:

ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றிவிட்டு மூச்சுவிட்டுக் கொள்! என்றுக் கூறினார்கள். அவர், நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.


كُنْتُ عِنْدَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ: أَسَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ أَنَّهُ نَهَى عَنِ النَّفْخِ فِي الشَّرَابِ؟ فَقَالَ لَهُ أَبُو سَعِيدٍ: نَعَمْ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لاَ أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فَأَبِنِ الْقَدَحَ عَن فِيكَ، ثُمَّ تَنَفَّسْ، قَالَ: فَإِنِّي أَرَى الْقَذَاةَ فِيهِ، قَالَ: فَأَهْرِقْهَا.


Muwatta-Malik-2638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.)

ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)


لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُهَاجِرَ (1) أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ.


Muwatta-Malik-2628

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)


مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ، تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ


Next Page » « Previous Page