Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

120. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது உண்ண அல்லது உறங்க விரும்பினால் தன் முகத்தையும், முழங்கை உட்பட கைகளையும் கழுவுவார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்வார்கள் (அதன்) பின்பு உண்பார்கள் அல்லது உறங்குவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ أَوْ يَطْعَمَ وَهُوَ جُنُبٌ غَسَلَ وَجْهَهُ، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ طَعِمَ أَوْ نَامَ


muwatta-malik-119

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

119. உங்களில் ஒருவர் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, பின்பு குளிக்கும் முன்பே தூங்க விரும்பினால் அவர் தொழுகைக்காக செய்யும் ஒளுவைப் போல் ஒளுச் செய்யும் வரை தூங்க வேண்டாம் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا أَصَابَ أَحَدُكُمُ الْمَرْأَةَ، ثُمَّ أَرَادَ أَنْ يَنَامَ قَبْلَ أَنْ يَغْتَسِلَ، فَلَا يَنَمْ حَتَّى يَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ»


muwatta-malik-118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 27

குளிப்புக் கடமையானவர் குளிக்கும் முன் உண்ண, உறங்க விரும்பினால் ஒளுச் செய்து கொள்ளுதல்!

118. ஒரு இரவில் தனக்குக் குளிப்புக் கடமை ஏற்பட்டது. குளித்து நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கூறினார்கள். ”உன் மறைவுறுப்பைக் கழுவி விட்டு ஒளுச் செய். பின்பு தூங்கு”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ யில் இடம் பெற்றுள்ளது)


ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ يُصِيبُهُ جَنَابَةٌ مِنَ اللَّيْلِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ: «تَوَضَّأْ، وَاغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ نَمْ»


muwatta-malik-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


«إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»


muwatta-malik-116

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

116. ஒருவர் தன் மனைவியிடம் உடலுறவு மூலம் இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்து விடுகிறார். (இவர் நிலை என்ன?) என்று ஸைத் இப்னு ஸாபித் அன்சாரி(ரலி) அவர்களிடம் மஹ்மூத் இப்னு லுபைதுல் அன்சாரி கேட்க, குளிக்க வேண்டும் என்று ஸைத்(ரலி) கூறினார்கள்.

உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் குளிக்கத் தேவையில்லை என்ற முடிவில் இருந்தார் என மஹ்மூத் கூறினார்கள். உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் இறக்கும் பொது அந்த முடிவில் இருந்து மாறி விட்டார் என ஸைத்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ مَحْمُودَ بْنَ لَبِيدٍ الْأَنْصَارِيَّ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ، عَنِ الرَّجُلِ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ؟ فَقَالَ زَيْدٌ: يَغْتَسِلُ. فَقَالَ لَهُ مَحْمُودٌ: إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ كَانَ لَا يَرَى الْغُسْلَ. فَقَالَ لَهُ زَيْدُ بْنُ ثَابِتٍ: «إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ نَزَعَ عَنْ ذَلِكَ، قَبْلَ أَنْ يَمُوتَ»


muwatta-malik-115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

115. ஒரு விஷயத்தில் நபித் தோழர்கள் கொண்ட கருத்து வேறுபாடு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. அதை உங்கள் முன் (தீர்ப்புக்காக?) வைப்பதே சிறந்தது எனக் கருதுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) கூறினார்கள். அது என்ன? ”உன் தாயிடம் எதைப் பற்றிக் கேட்பீரோ, அதை என்னிடம் நீர் கேட்பீராக”” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘ஒருவர் தன் மனைவியிடம் (உடல் உறவு மூலம்) இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்தார். (இவர் குளிக்க வேண்டுமா?) என்று கேட்டார். ‘பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு இணைந்து விட்டால் குளிப்பது கடமை” என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதும், உங்களுக்குப் பின்னால் யாரிடமும் இது பற்றி எப்போதும் கேட்க மாட்டேன் என அபூ மூஸா அல் அஷ் அரி(ரலி) கூறினார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

(இதன் கருத்து முஸ்லிம், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).


أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ أَتَى عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا: لَقَدْ شَقَّ عَلَيَّ اخْتِلَافُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمْرٍ، إِنِّي لَأُعْظِمُ أَنْ أَسْتَقْبِلَكِ بِهِ. فَقَالَتْ مَا هُوَ؟ مَا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ، فَسَلْنِي عَنْهُ. فَقَالَ: الرَّجُلُ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ؟ فَقَالَتْ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ». فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لَا أَسْأَلُ عَنْ هَذَا أَحَدًا، بَعْدَكِ أَبَدًا


muwatta-malik-114

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

114. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிப்பது எப்போது கடமையாகும்? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், அபூஸலமாவே! கோழிகளுடன் சேர்ந்து சப்தமிடும் கோழிக் குஞ்சு போன்றவர் நீர் என்பது உமக்குத் தெரியுமா? என்று கூறிவிட்டு, “பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு சேர்ந்து விட்டால் குளிப்பது கடமையாகும்” என பதிலளித்தார்கள்.


سَأَلْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا يُوجِبُ الْغُسْلَ؟ فَقَالَتْ: هَلْ تَدْرِي مَا مَثَلُكَ يَا أَبَا سَلَمَةَ مَثَلُ الْفَرُّوجِ يَسْمَعُ الدِّيَكَةَ تَصْرُخُ فَيَصْرُخُ مَعَهَا «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»


muwatta-malik-113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 26

மறைவுறுப்பு இரண்டு இணைந்து விடடால் குளிப்புக் கடமையாகும்

113. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆயிஷா(ரலி) ஆகியோர் கூறியதாக ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَعُثْمَانَ بْنَ عَفَّانَ، وَعَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانُوا يَقُولُونَ: «إِذَا مَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»


muwatta-malik-112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

112. குளிப்புக் கடமையான பெண் குளிப்பது பற்றி கேட்கப்பட்ட போது, ”தண்ணீரில் இருந்து தன் தலையின் மீது அவள் மூன்று முறை ஊற்றட்டும். பின்பு தன் கைகளால் அவள் தன் தலையை கோதி விடட்டும் என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள், என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

(புகாரி, அபூதாவூதில் இது இடம் பெற்றுள்ளது).


أَنَّ عَائِشَةَ سُئِلَتْ عَنْ غُسْلِ الْمَرْأَةِ مِنَ الْجَنَابَةِ، فَقَالَتْ: «لِتَحْفِنْ عَلَى رَأْسِهَا ثَلَاثَ حَفَنَاتٍ مِنَ الْمَاءِ، وَلْتَضْغَثْ رَأْسَهَا بِيَدَيْهَا»


muwatta-malik-111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

111. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கடமையான குளிப்பைக் குளித்தால் தன் வலது கையில் (தண்ணீர்) ஊற்றி, அதைக் கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தனது மறைவுறுப்பைக் கழுவுவார்கள். பின்பு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்துவார்கள். பின்பு முகத்தைக் கழுவி விட்டு, தன் கண்களில் தெளிப்பார்கள். பின்பு வலது கையைக் கழுவி, இடது கையையும் கழுவுவார்கள். பின்பு தன் தலையை கழுவி விட்டு குளிப்பார்கள். தண்ணீரைத் தன் மீது (ஊற்றி) ஓட விடுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ «فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى، فَغَسَلَهَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ. ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَنَضَحَ فِي عَيْنَيْهِ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ الْيُسْرَى. ثُمَّ غَسَلَ رَأْسَهُ. ثُمَّ اغْتَسَلَ وَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ»


Next Page » « Previous Page