110. குளிப்புக் கடமைக்காக (12 முத்து கொள்ளளவு) ஃபரக் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ»
110. குளிப்புக் கடமைக்காக (12 முத்து கொள்ளளவு) ஃபரக் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ»
பாடம் 25
குளிப்பு முறை
109. நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது தன் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்வார்கள். பின்பு தன் விரல்களை தண்ணீருக்குள் நுழைத்து அவைகளை தன் (தலை) முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்பு தன் தலை மீது கைகளால் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றுவார்கள். பின்பு தன் உடல் முழுவதும் தண்ணீரை (ஊற்றி) ஓட விடுவார்கள் என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ யில் உள்ளது).
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ «بِغَسْلِ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غَرَفَاتٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ»
107. ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதனால் ஒளுச் செய்தல் அவசியம் என்று அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுகின்றார்கள்.
(குறிப்பு: மேற்கண்டவைகள் நபிமொழிகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்க. நபி(ஸல்) அவர்கள் தொழும் போது படுத்திருந்த ஆயிஷா(ரலி) அவர்களின் காலை சுரண்டுவது மூலம் அவர்களைத் தொட்டுள்ளார்கள். மேலும் 5:6 வசனத்தில் உள்ள ”முலாமஸத்”” என்ற வாசகத்திற்கு, ‘உடலுறவு கொள்வது” என்பதே பொருளாகும்).
«مِنْ قُبْلَةِ الرَّجُلِ امْرَأَتَهُ الْوُضُوءُ»
பாடம் 24
ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் ஒளு..?
106. ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதும், தன் கையால் அவளைத் தொடுவதும், 5:6 வசனத்தில் உள்ள ”பெண்களைத் தீண்டினால்”” என்பதில் உள்ளதாகும். ஒருவன் தன் மனைவியை முத்தமிட்டால் அல்லது தன் கையால் அவளைத் தொட்டால் அவன் மீது ஒளுச் செய்வது கடமையாகும்”” என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
«قُبْلَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَجَسُّهَا بِيَدِهِ، مِنَ الْمُلَامَسَةِ، فَمَنْ قَبَّلَ امْرَأَتَهُ، أَوْ جَسَّهَا بِيَدِهِ، فَعَلَيْهِ الْوُضُوءُ»
105. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் உதயமாகிய பின் ஒளுச் செய்து, பின்பு தொழுததைப் பார்த்தேன். இந்தத் தொழுகையைத் தான் (சற்று முன்) தொழுதீர்களே! என்றேன். சுப்ஹுத் தொழுகைக்காக நான் ஒளுச் செய்து விட்டு, என் மறைவுறுப்பைத் தொட்டேன். எனவே (மீண்டும்) ஒளுச் செய்தேன். மீண்டும் தொழுதேன் என்று பதில் கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.
(குறிப்பு: சதாரணமாக மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது. ஆசையுடன் தொட்டு, அதன் மூலம் மதீ வெளிப்பட்டாலே ஒளு முறியும். மறைவுறுப்பைத் தொட்டால் ஒளு முறியாது என்று வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).
كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي سَفَرٍ، فَرَأَيْتُهُ، بَعْدَ أَنْ طَلَعَتِ الشَّمْسُ، تَوَضَّأَ ثُمَّ صَلَّى. قَالَ: فَقُلْتُ لَهُ: إِنَّ هَذِهِ لَصَلَاةٌ مَا كُنْتَ تُصَلِّيهَا، قَالَ: «إِنِّي بَعْدَ أَنْ تَوَضَّأْتُ لِصَلَاةِ الصُّبْحِ مَسِسْتُ فَرْجِي، ثُمَّ نَسِيتُ أَنْ أَتَوَضَّأَ، فَتَوَضَّأْتُ وَعُدْتُ لِصَلَاتِي»
104. என் தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் குளித்து விட்டு பின்பு ஒளுச் செய்வதையும் பார்த்தேன். தந்தையவர்களே! குளித்ததே ஒளுவிற்கும் பகரமாகி விடுமே என்று நான் கேட்டேன். ‘ஆம்”. பகரமாகி விடும் தான் என்றும், நான் மறைவுறுப்பை சில சமயம் தொட்டிருக்கக் கூடும். எனவே ஒளுச் செய்தேன் என்று (பதில்) கூறினார்கள். இதை ஸாலிம் கூறுகின்றார்கள்.
رَأَيْتُ أَبِي، عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَغْتَسِلُ ثُمَّ يَتَوَضَّأُ. فَقُلْتُ لَهُ: يَا أَبَتِ أَمَا يَجْزِيكَ الْغُسْلُ مِنَ الْوُضُوءِ؟ قَالَ: «بَلَى وَلَكِنِّي أَحْيَانًا أَمَسُّ ذَكَرِي فَأَتَوَضَّأُ»
103. ஒருவன் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
مَنْ مَسَّ ذَكَرَهُ، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ
102. உங்களில் ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டு விட்டால் ஒளுச் செய்யட்டும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
«إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ»
101. ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் முன் நான் குர்ஆனைப் படித்து இருந்தேன். அதுசமயம் நான் சொறிந்தேன். ”உன் மறைவுறுப்பைத் தொட்டிருக்க வேண்டுமே”” என ஸஃது(ரலி) கேட்க, நான் ஆம் என்றேன். ‘நீ எழுந்து (போய்) ஒளுச் செய்” என்று ஸஃது(ரலி) கூறினார்கள். நான் எழுந்து போய் ஒளுச் செய்து விட்டுத் திரும்பினேன் என முஸ்அப் அவர்கள் கூறுகின்றார்கள்.
كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَاحْتَكَكْتُ فَقَالَ سَعْدٌ: «لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ؟» قَالَ: فَقُلْتُ نَعَمْ. فَقَالَ: «قُمْ، فَتَوَضَّأْ». فَقُمْتُ فَتَوَضَّأْتُ، ثُمَّ رَجَعْتُ
பாடம் 23
மறைவுறுப்பைத் தொடுவதால் ஒளு?
100. நான் மர்வான் இப்னு ஹகம் அவர்களிடம்சென்றேன். அப்போது எதனால் ஒளு நீங்கும்? எனப் பேசிக் கொண்டிருந்தோம். மறைவுறுப்பை தொடுவதினால் ஒளுச் செய்தல் வேண்டும் என் மர்வான் கூறினார். இது எனக்குத் தொரியாது என நான் கூறினேன். அப்போது மர்வான் அவர்கள், ”ஒருவர் தன் மறைவுறுப்பைத் தொட்டால் அவர் ஒளுச் செய்யட்டும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என புஸ்ரா பின்த் ஸப்வான் (ரலி அவர்கள் தனக்குக் கூறியதாக கூறினார்கள். இதை உர்வா இப்னுஸ் ஸுபைர் அறிவிக்கின்றார்கள்.
(இது திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ல் உள்ளது).
دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَتَذَاكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ، فَقَالَ مَرْوَانُ وَمِنْ مَسِّ الذَّكَرِ الْوُضُوءُ، فَقَالَ عُرْوَةُ مَا عَلِمْتُ هَذَا، فَقَالَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»
சமீப விமர்சனங்கள்