5127.
إِذَا خَرَجَتِ الْمَرْأَةُ إِلَى الْمَسْجِدِ، فَلْتَغْتَسِلْ مِنَ الطِّيبِ، كَمَا تَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ
مُخْتَصَرٌ
5127.
إِذَا خَرَجَتِ الْمَرْأَةُ إِلَى الْمَسْجِدِ، فَلْتَغْتَسِلْ مِنَ الطِّيبِ، كَمَا تَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ
مُخْتَصَرٌ
பாடம்:
பாங்கின் போது கூறவேண்டிய பிரார்த்தனை.
679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் (தஷஹ்ஹுத்) அறிவிப்பைக் கேட்கக்கூடியவர், “வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா, என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டன்.)
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ
பாடம்:
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் கிடைக்கும் படித்தரங்கள்.
3131. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) “அபூஸயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு வியப்படைந்த நான், “மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்” என்று கூறினார்கள்.
நான், “அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்” என்று விடையளித்தார்கள்.
«يَا أَبَا سَعِيدٍ، مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» قَالَ: فَعَجِبَ لَهَا أَبُو سَعِيدٍ، قَالَ: أَعِدْهَا عَلَيَّ يَا رَسُولَ اللَّهِ، فَفَعَلَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأُخْرَى يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِائَةَ دَرَجَةٍ فِي الْجَنَّةِ، مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» قَالَ: وَمَا هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»
339.
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ»
338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ»
பாடம்:
நாய் குடித்து மீதம் வைத்த தண்ணீர்.
335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ، ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
பாடம்:
நாய் வாய் வைத்துவிட்டால் பாத்திரத்தில் உள்ளதை கீழே ஊற்றிவிடவேண்டும் என்ற கட்டளை.
66. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيُرِقْهُ، ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
64. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
பாடம்:
நாய் குடித்து மீதம் வைத்த தண்ணீர்.
63. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»
சமீப விமர்சனங்கள்