Category: நஸாயி

Nasaayi-934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

934. ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ‘கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الْحَارِثَ بْنُ هِشَامِ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ»

قَالَتْ عَائِشَةُ: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا


Nasaayi-933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 37

குர்ஆனைப் பற்றி வந்துள்ள செய்திகளின் தொகுப்பு.

933. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது? எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் வஹீ வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒரு வாலிபரின் தோற்றத்தில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார்”என்று பதிலளித்தார்கள்.


سَأَلَ الْحَارِثُ بْنِ هِشَامِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ قَالَ: «فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ عَنْهُ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صُورَةِ الْفَتَى فَيَنْبِذُهُ إِلَيَّ»


Nasaayi-5068

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.

5068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ نَتْفِ الشَّيْبِ»


Nasaayi-441

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தூங்கி எழுந்த பின் உளூச் செய்யுமாறு வந்துள்ள கட்டளை.

441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا؛ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Nasaayi-161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தூங்கி எழும்போது உளூச் செய்தல்.

161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் (உளூச் செய்யும்) பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا ثَلَاثَ مَرَّاتٍ؛ فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Nasaayi-1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

தூய்மை.

பாடம்: 1

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 5:6) என்று துவங்கும் வசனத்தின் விளக்கம்.

1 . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூ தண்ணீரின் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Nasaayi-2524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மம்.

2524. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Nasaayi-139

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 105

(தொழுகைக்கு உளூ எனும்) அங்கத் தூய்மை செய்வது கடமையாகும்.

139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Nasaayi-1182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1182.


أَنَّهُ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ يَرْفَعُ يَدَيْهِ كَذَلِكَ حَذْوَ الْمَنْكِبَيْنِ»


Nasaayi-1144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1144.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ، وَبَعْدَ الرُّكُوعِ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ»


Next Page » « Previous Page