Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-7273

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

7273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உனது முஸ்லிம் சகோதரனை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது, அல்லது அவரது கடனைத் தீர்ப்பது, அல்லது அவருக்கு ரொட்டி (உணவு) அளிப்பது ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதே போன்று வலீத் பின் ஷுஜாஃ அவர்களும் அம்மார் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் அம்ர் … என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.

இதில் இடம்பெறும் அம்மார் பின் முஹம்மத் என்பவரைப் பற்றி விமர்சனம் உள்ளது. மேலும் இந்த ஹதீஸுக்கு (இதை அடுத்து வரும்) முர்ஸலான செய்தி (ஹதீஸ் எண்-7274) ஷாஹிதாக உள்ளது.


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ” أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا “

وَكَذَلِكَ رَوَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، عَنْ عَمَّارِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، وَعَمَّارُ بْنُ مُحَمَّدٍ فِيهِ نَظَرٌ، وَهَذَا الْحَدِيثُ شَاهِدٌ مُرْسَلٌ


Shuabul-Iman-3800

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக சொர்க்கத்தில் ரஜப் என்ற ஒரு ஆறு உள்ளது. அதன் தண்ணீர் பாலை விட வென்மையாது; அதன் சுவை தேனை விட இனிமையானது. எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن و أحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهر


Shuabul-Iman-7342

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7342. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆண்களை விட 99 மடங்கு பெண்களுக்கு ஆசை (காமம்) அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், (ஆசையை அடக்கிக் கொள்ள) அல்லாஹ் அவர்கள் மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


فُضِّلَتِ الْمَرْأَةُ عَلَى الرَّجُلِ بِتِسْعَةٍ وَتِسْعِينَ جُزْءًا مِنَ اللَّذَّةِ، وَلَكِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَلْقَى عَلَيْهِنَّ الْحَيَاءَ


Shuabul-Iman-8940

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8940.


اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ الْيَهُودَ , وَالنَّصَارَى فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ , فَإِنَّ السَّخَطُ يَنْزِلُ عَلَيْهِمْ , فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ , وَلَا تَعْلَمُوا بِطَانَتَهُمْ فَتَخَلَّقُوا بِخُلُقِهِمْ


Shuabul-Iman-7941

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றாழை தேனைக் கெடுத்துவிடுவது போன்று கோபம் ஈமானைக் கெடுத்துவிடும்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)

(இந்தச் செய்தியை அறிவிக்கும் பைஹகீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஹாஸிம்-அம்ர் பின் அஹ்மத் அவர்கள் கூறியதாவது:

இந்தச் செய்தியை முகய்யிஸ் பின் தமீம் என்பவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ


Shuabul-Iman-2171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2171.


سُورَةُ الْبَقَرَةِ فِيهَا آيَةٌ سَيِّدةُ آيِ الْقُرْآنِ لَا تُقْرَأُ فِي بَيْتٍ، فِيهِ شَيْطَانٌ إِلَّا خَرَجَ مِنْهُ آيَةُ الْكُرْسِيِّ


Shuabul-Iman-9423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9423.


إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَتَتْ لَهُ إِلَيْهَا حَاجَةٌ , فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ فَتَوَفَّاهُ فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: يَا رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي


Next Page » « Previous Page