தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-7342

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:

ஆண்களை விட 99 மடங்கு பெண்களுக்கு ஆசை (காமம்) அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், (ஆசையை அடக்கிக் கொள்ள) அல்லாஹ் அவர்கள் மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(shuabul-iman-7342: 7342)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أنا أَبُو عَبْدِ اللهِ الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ بْنِ أَيُّوبَ، أنا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ، نا أَبُو الْأَسْوَدِ، نا ابْنُ لَهِيعَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ اللَّيْثِيِّ،. أَنَّ أَبَا دَاوُدَ، مَوْلَى بَنِي مُحَمَّدٍ الزُّهْرِيِّ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

فُضِّلَتِ الْمَرْأَةُ عَلَى الرَّجُلِ بِتِسْعَةٍ وَتِسْعِينَ جُزْءًا مِنَ اللَّذَّةِ، وَلَكِنَّ اللهَ عَزَّ وَجَلَّ أَلْقَى عَلَيْهِنَّ الْحَيَاءَ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-7342.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

 


நூல் : கன்ஸுல் உம்மால்.

* . கன்ஸுல் உம்மால் என்ற நூல் – ஸஹீஹுல் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஸஹீஹ் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
சுனனுத் திர்மிதீ சுனனுந் நஸாஈ ஆகிய நூல்களைப் போன்ற நூல் அல்ல.

* . கன்ஸுல் உம்மால் என்ற இந்த நூலை எழுதிய – அலாவுதீன் அலீ பின் ஹிஸாமுத்தீன் என்பவர் , இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் புர்ஹான்ஃபூர் என்ற ஊரில் – ஹிஜ்ரி – 885’ல் பிறந்து ஹிஜ்ரி – 975’ல் மரணித்தவர் ஆவார். இவர் காதிரிய்யா ஷாதுலிய்யா என்ற வழிகெட்ட தரீக்கா’வை பின்பற்றியவரும் ஆவார். மேலும் இந்த கன்ஸுல் உம்மால் என்ற நூலில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளே அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

* . இந்தச் செய்தி – இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் ஷுஃஅபுல் ஈமான் – 7737’லும், இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் மீஸானுல் இஃதிதால் – 4/521’லும், இமாம் கராயீத்தீ அவர்களின் இஃதிலாலுல் குலூப் – 152’லும், இப்னு அபீ அத்துன்யா அவர்களின் அந்நஃப்கத்து அலல் இயால் – 141’லும், தைலமீ அவர்களின் முஸ்னதுல் ஃபிர்தவ்ஸ் – 4338’லும், அஸ்ஸன்ஆனீ அவர்களின் அத்தன்வீரு ஷர்ஹில் ஜாமிஇஸ் ஸஃகீர் – 7/508’லும் இடம் பெற்றுள்ளது.

أبو داود مولى أبي مكمل، قال في الميزان: قال البخاري: منكر الحديث
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் – அபூ முக்மல் என்பவரின் அடிமை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறினார்கள் என்று இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

* . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அறிவித்ததாக – உஸாமா பின் ஸைத் என்பவரும் – உஸாமா பின் ஸைத் அறிவித்ததாக அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவரும் அறிவித்துள்ளனர். உஸாமா பின் ஸைத் மற்றும் அப்துல்லாஹ் பின் லஹீஆ இருவரையும் ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமான நபர்கள் என்று கூறியுள்ளார்கள்.

وقال فيه الألباني في ضعيف الجامع: ضعيف جدا
* . நாஸிருத்தீன் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் – அல்ழயீஃபுல் ஜாமிஇ – 3981’ல் இது முற்றிலும் பலவீனமான செய்தி என்றும், முஹம்மது தாஹிர் அல்ஃபத்னீ அவர்கள் – தத்கிரத்துல் மவ்ளுஆத் – 918’ல் இது இட்டுக் கட்டப்பட்டச் செய்தி என்றும் கூறியுள்ளார்கள்.

وقال ابن عقيل في الفنون: قال فقيه: شهوة المرأة فوق شهوة الرجل بتسعة أجزاء. فقال حنبلي: لو كان هذا ما كان له أن يتزوج بأربع، وينكح ما شاء من الإماء. ولا تزيد المرأة على رجل، ولها من القسم الربع، وحاشا حكمته أن تضيق على الأحوج” انتهى.

وقال ابن القيم في إعلام الموقعين عند ذكر الحكمة في إباحة التعدد للرجل دون المرأة: وأما قول القائل: إن شهوة المرأة تزيد على شهوة الرجل فليس كما قال، والشهوة منبعها الحرارة، وأين حرارة الأنثى من حرارة الذكر، ولكن المرأة ـ لفراغها وبطالتها وعدم معاناتها لما يشغلها عن أمر شهوتها وقضاء وطرها ـ يغمرها سلطان الشهوة ويستولي عليها، ولا يجد عندها ما يعارضه، بل يصادف قلبا فارغا ونفسا خالية فيتمكن منها كل التمكن، فيظن الظان أن شهوتها أضعاف شهوة الرجل، وليس كذلك. ومما يدل على هذا أن الرجل إذا جامع امرأته أمكنه أن يجامع غيرها في الحال، وكان النبي صلى الله عليه وسلم يطوف على نسائه في الليلة الواحدة، وطاف سليمان على تسعين امرأة في ليلة. ومعلوم أن الرجل له عند كل امرأة شهوة وحرارة باعثة على الوطء، والمرأة إذا قضى الرجل وطره فترت شهوتها، وانكسرت نفسها، ولم تطلب قضاءها من غيره في ذلك الحين، فتطابقت حكمه القدر والشرع والخلق والأمر.

இந்தச் செய்தி’யில் சொல்லப்படும் கருத்து சரியானதாக (ஒரு ஆணை விட ஒரு பெண்ணிற்கு 99′ மடங்கு அதிகமாக காம ஆசை வழங்கப்பட்டு) இருந்தால் – ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எப்படி அனுமதிக்கப்பட்டு இருக்கும். ? ஒரு பெண்ணிற்கு எப்படி ஒரு ஆணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியுடைய ஒரு ஆண் ஒரே நாளில் அனைத்து மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபட்டு வருவது – ஒரு பெண்ணை விட ஆண் தான் – அதிக காம உணர்வு உடையவனாக இருக்கிறான் என்று தெரிகிறது என்று இந்தச் செய்தி’யை தர்க்கவியலான காரணங்களை முன்வைத்து – இந்தச் செய்தி’யில் சொல்லப்படும் வாக்கியமே தவறு என்று கூறி – இச் செய்தி’யை இப்னுல் கைய்யிம் அவர்களும் இப்னு உகைல் அவர்களும் ஹம்பலீ அவர்களும் மறுத்துள்ளார்கள். காண்க : கித்தாபுல் அல்ஃபுனூன் . இஃலாமுல் மூகியீன். அல்ஆதாபுஷ் ஷர்இய்யா.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.