Category: திர்மிதீ

Tirmidhi-1079

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1079. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறை நம்பிக்கையாளரின் உயிர் அவர் வாங்கிய கடனால் (சொர்க்கம் செல்ல முடியாதவாறு) தடுக்கப்படுகிறது. அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை (அவருக்கு நிம்மதி கிடைக்காது).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ். மேலும் இதுவே இதற்கு முன்னுள்ள ஹதீஸ் எண்-1078 இல் இடம்பெற்ற செய்தியை விட மிகச் சரியானது.


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Tirmidhi-1078

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1078.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தினால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகின்ற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Tirmidhi-1072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1072.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)


إِذَا مَاتَ المَيِّتُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، ثُمَّ يُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ


Tirmidhi-1067

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1067.

அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல.

ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ»، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّنَا نَكْرَهُ المَوْتَ، قَالَ: «لَيْسَ ذَلِكَ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ، أَحَبَّ لِقَاءَ اللَّهِ، وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ، كَرِهَ لِقَاءَ اللَّهِ، وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ»


Tirmidhi-2188

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கலகம் செய்வோரின் பண்புகள்.

2188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.

நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.


«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»


Tirmidhi-1077

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1077.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبَّرَ عَلَى جَنَازَةٍ، فَرَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ، وَوَضَعَ اليُمْنَى عَلَى اليُسْرَى».


Tirmidhi-956

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினார்களோ அதற்காக தான் நானும் தல்பியா கூறினேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்தால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.


أَنَّ عَلِيًّا، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ ‏”‏ بِمَ أَهْلَلْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ ‏”‏ لَوْلاَ أَنَّ مَعِي هَدْيًا لأَحْلَلْتُ ‏”‏


Tirmidhi-957

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஜ்ஜுல் அக்பர் நாள் குறித்து கேள்வி கேட்டேன், அது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளாகும் என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.


قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ ‏ “‏ يَوْمُ النَّحْرِ‏” ‏


Tirmidhi-958

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜுல் அக்பர் நாள் என்பது ‘யவ்முன் நஹ்ருடைய’ (துல்ஹஜ் பத்தாம்) நாளாகும்.


قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ


Tirmidhi-962

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ நிலையில் இருந்த போது நறுமணம் கலக்காத ஆலிவ் எண்ணையை (தமது தலையில்) தேய்ப்பார்கள்.


أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ


Next Page » « Previous Page