ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: 6
மலஜலம் கழிக்கும்போது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்குவதற்கு வந்துள்ள தடை.
8. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கி அமரவும் வேண்டாம்; அதற்குப் புறம் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பி (அமர்ந்து) கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் மலஜலம் கழிக்கும்போது (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக்கொண்டோம்; (அதற்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஜஸ்உ அஸ்ஸுபைதீ (ரலி), மஃகில் பின் அபூமஃகில் எனப்படும் மஃகில் பின் அபுல்ஹைஸம் (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸே இப்பாடப் பொருளில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகானதும் ஆதாரபூர்வமானதும்
«إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ مُسْتَقْبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ عَنْهَا، وَنَسْتَغْفِرُ اللَّهَ.
சமீப விமர்சனங்கள்