பாடம்: 2
தூய்மையின் சிறப்பு குறித்து வந்துள்ளவை.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘முஸ்லிமான’ அல்லது ‘முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும் போது தமது முகத்தைக் கழுவினால், கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன் அல்லது இது போன்ற (வேறொரு வார்த்தையில் கூறினார்கள். அ)தனுடன் முகத்திலிருந்து வெளியேறி விடுகின்றன.
அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறிவிடுகின்றன. இறுதியில் அவர் (கால்களைக் கழுவி முடிக்கும்போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.
அறிவிப்பாளர் ஸுஹைல் அவர்களின் தந்தை அபூஸாலிஹ் அஸ்ஸம்மான் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘தக்வான்’ என்பதாகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்களின் இயற்பெயர் விஷயத்தில் கருத்து வேறுபாடு
«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ، أَوِ الْمُؤْمِنُ، فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا – وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ – حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»
சமீப விமர்சனங்கள்