தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-86

A- A+


ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ஹுமைராவே! (சிகப்பழகியே!) இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது மிகவும் அரிதான செய்தி. இதில் வரும் காலித் பின் இஸ்மாயீல் என்பவர் (பொய்யர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால்) கைவிடப்பட்டவர் ஆவார்.

(daraqutni-86: 86)

نا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , وَآخَرُونَ قَالُوا: حَدَّثَنَا سَعْدَانُ بْنُ نَصْرٍ , نا خَالِدُ بْنُ إِسْمَاعِيلَ الْمَخْزُومِيُّ , نا هِشَامُ بْنُ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ , رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:

دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَخَّنْتُ مَاءً فِي الشَّمْسِ , فَقَالَ: «لَا تَفْعَلِي يَا حُمَيْرَا فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ»

غَرِيبٌ جِدًّا , خَالِدُ بْنُ إِسْمَاعِيلَ مَتْرُوكٌ


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-86.
Daraqutni-Shamila-86.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-68.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகள்,
    1 . காலித் பின் இஸ்மாயீல் அல்மக்ஸூமீ,
    2 . வஹ்ப் பின் வஹ்ப்-அபுல்பக்தரீ,
    3 . ஹைஸம் பின் அதீ,
    4 . முஹம்மத் பின் மர்வான் அஸ்ஸுத்தீ,
    5 . இஸ்மாயீல் பின் அம்ர்,
    6 . அம்ர் பின் முஹம்மத் போன்ற பொய்யர்களான, பலவீனமானவர்களின் வழியாகவே வந்துள்ளது.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14473-காலித் பின் இஸ்மாயீல் அல்மக்ஸூமீ என்பவர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கதீப் பஃக்தாதீ ஆகியோர் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக ஹதீஸ்களை பொய்யாக இட்டுக்கட்டி கூறுபவர் என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
  • இவர் உபைதுல்லாஹ் பின் உமர் அவர்கள் வழியாக முன்கரான, அதிசியமான செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இவரை எப்போதும் ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு தாஹிர் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/475, லிஸானுல் மீஸான்-3/314)

எனவே இது பொய்யான, மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5747 , தாரகுத்னீ-86 , 87 , குப்ரா பைஹகீ-14 ,


2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-88 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அள்ளுஅஃபாஉள் கபீர்-உகைலீ-2/176 , அல்மவ்ளூஆத்-இப்னுல் ஜவ்ஸீ-2/79 , அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் கிலாஃப்-42 ,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.