தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1347

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது கூறவேண்டியவை.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது (அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி) தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். மேலும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1347)

بَابُ: القوْلِ بَعْدِ رَفْعِ الرَّأْسِ مِنَ الرُّكُوعِ

أَخْبَرَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، فَإِذَا رَكَعَ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» وَلَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1347.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1279.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14656-காலித் பின் மக்லத் பற்றி இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் கூறியுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்திகளை கூறிவிட்டு இவற்றில் நான் முன்கரான செய்திகளை காணவில்லை என்று கூறியுள்ளார். என் பார்வையில் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்…

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1599, தஹ்தீபுத் தஹ்தீப்-1/531, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-595)

  • இந்த செய்தியை மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாமிடமிருந்து உஸ்மான் பின் உமர் அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் இதில் விமர்சனம் இல்லை.

மேலும் பார்க்க: புகாரி-735 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.