அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைத் தடுக்கும் விதமாக யாருடைய பரிந்துரை அமைகிறதோ, அவர் அல்லாஹ்வின் கட்டளையையே எதிர்த்தவர் ஆவார்.
எவர் கடன் உள்ள நிலையில் மரணிக்கிறாரோ, அங்கே (மறுமையில் அதை ஈடுகட்ட) தீனாரோ திர்ஹமோ இருக்காது; மாறாக நன்மைகளும் தீமைகளுமே இருக்கும்.
எவர் ஒரு வழக்கு அநியாயமானது என்று தெரிந்தே அதில் (சாதகமாக) வாதிடுகிறாரோ, அவர் அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திலேயே இருப்பார்.
எவர் ஒரு முஃமினைப் பற்றி அவரிடம் இல்லாத குறையை அபாண்டமாகச் சொல்கிறாரோ, அவர் தான் சொன்னதிலிருந்து (தப்பிப்பதற்கான ஆதாரத்தையோ அல்லது பரிகாரத்தையோ) கொண்டு வரும் வரை அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் அல்லாஹ் தங்க வைப்பான்.
(ஹாகிம்: 2222)أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَ الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْأَسْفَاطِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ رَاشِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ فِي أَمْرِهِ، وَمَنْ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ، فَلَيْسَ ثَمَّ دِينَارٌ، وَلَا دِرْهَمٌ، وَلَكِنَّهَا الْحَسَنَاتُ وَالسَّيِّئَاتُ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ، حُبِسَ فِي رَدْغَةِ الْخَبَالِ حَتَّى يَأْتِيَ بِالْمَخْرَجِ مِمَّا قَالَ»
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2222.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: அபூதாவூத்-3597.
சமீப விமர்சனங்கள்