தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-311

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான உம்ரா செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது)  கிடைக்கும்.

(இவ்வாறே) ஒருவர் மாலையில் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி (போன்றது) கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(ஹாகிம்: 311)

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ الْقَنْطَرِيُّ، بِبَغْدَادَ، ثنا أَبُو قِلَابَةَ، ثنا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ»

«قَدِ احْتَجَّ الْبُخَارِيُّ بِثَوْرِ بْنِ يَزِيدَ فِي الْأُصُولِ وَخَرَّجَهُ مُسْلِمٌ فِي الشَّوَاهِدِ، فَأَمَّا ثَوْرُ بْنُ يَزِيدَ الدِّيلِيُّ فَإِنَّهُ مُتَّفَقٌ عَلَيْهِ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-311.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-284.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அல்கன்தரீ

3 . அபூகிலாபா-அப்துல்மலிக் பின் முஹம்மத்

4 . அபூஆஸிம்-ளஹ்ஹாக் பின் மக்லத்

5 . ஸவ்ர் பின் யஸீத்

6 . காலித் பின் மஃதான்

7 . அபூஉமாமா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36060-முஹம்மத் பின் அஹ்மத் அல்கன்தரீ அவர்கள் பற்றி இவரின் பெயரைக் கொண்டவரான முஹம்மத் பின் அஹ்மத்-இப்னு அபுல் ஃபவாரிஸ் அவர்கள் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • மேலும் ராவீ-26627-அபூகிலாபா-அப்துல்மலிக் பின் முஹம்மத் பஸராவாசி ஆவார். இவர் பஃக்தாத் சென்றபோது மூளைக் குழம்பிவிட்டார் என்று இப்னுகுஸைமா போன்றோர் கூறியுள்ளனர். இந்தச் செய்தியை அபூகிலாபா அவர்களிடமிருந்து பக்தாதைச் சேர்ந்த அல்கன்தரீ அறிவித்துள்ளார்.

ذيل ميزان الاعتدال (ص178):
636 – مُحَمَّد بن أَحْمد بن تَمِيم أَبُو الْحُسَيْن الحناط الْبَغْدَادِيّ الْقَنْطَرِي
كَانَ ينزل قنطرة البردان بِبَغْدَاد
روى عَن أَحْمد بن عبيد الله النَّرْسِي وَأبي إِسْمَاعِيل التِّرْمِذِيّ وَأبي قلَابَة عبد الْملك بن مُحَمَّد الرقاشِي فِي آخَرين
روى عَنهُ أَبُو عبد الله الْحَاكِم وَأَبُو الْحسن بن رزقويه وَآخَرُونَ
قَالَ ابْن أبي الفوارس كَانَ فِيهِ لين
قلت روى عَنهُ الْحَاكِم فِي كتاب الْعلم من الْمُسْتَدْرك عَن أبي قلَابَة الرقاشِي عَن أبي عَاصِم عَن ثَوْر بن يزِيد عَن خَالِد بن معدان عَن أبي أُمَامَة مَرْفُوعا
‌من ‌غَدا ‌إِلَى ‌الْمَسْجِد ‌لَا ‌يُرِيد ‌إِلَّا ‌ليتعلم خيرا أَو يُعلمهُ كَانَ لَهُ أجر مُعْتَمر تَامّ الْعمرَة الحَدِيث وَقَالَ إِنَّه على شَرط الشَّيْخَيْنِ
قلت وَسَمَاع الْقَنْطَرِي من أبي قلَابَة بعد اخْتِلَاطه لَيْسَ بِصَحِيح قَالَ ابْن خُزَيْمَة فِي صَحِيحه ثَنَا أَبُو قلَابَة بِالْبَصْرَةِ قبل أَن يخْتَلط وَيخرج إِلَى بَغْدَاد

(நூல்: தைலு மீஸானுல் இஃதிதால்-1/178)

ஸவ்ர் பின் யஸீத் அவர்கள் வழியாக வரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் (அல்முஃஜமுல் கபீர்-7473) மேற்கண்ட செய்தியின் இரண்டாவது பகுதி இடம்பெறவில்லை. எனவே இது முன்கர் என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7473.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.