தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-3231

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். (அல்குர்ஆன் 6:38) எனும் இறைவசனம் குறித்து கூறியதாவது:

“மறுமை நாளில் கால்நடைகள், ஊர்ந்து செல்பவைகள், பறவைகள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஒன்று திரட்டப்படும். அல்லாஹ்வின் நீதியானது எந்த அளவு (துல்லியமாக) இருக்குமென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை (இவ்வுலகில்) முட்டியிருந்தால், அதற்காக அந்தக் கொம்பில்லாத ஆட்டிற்குப் பழிவாங்கித் தரப்படும்.

பின்னர் அல்லாஹ் (அம்மிருகங்களைப் பார்த்து), ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அதைக் காணும் போதே இறைமறுப்பாளன்,

“அந்தோ பரிதாபம்! நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான். (அல்குர்ஆன்: 78:40)

அறிவிப்பவர்: யஸீத் பின் அஸம் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்) ஜஅஃபர் அல்ஜித்ரீ (அல்ஜஸரீ என்பதே சரி) என்பவர் ‘ஜஅஃபர் பின் புர்கான்’ ஆவார். இவரை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். எனவே, இச்செய்தி இமாம் முஸ்லிமின் நிபந்தனைப்படி சரியான தரத்தில் உள்ளது. ஆனால் இதை புகாரீ, முஸ்லிம் அறிஞர்கள் (தமது நூல்களில்) பதிவு செய்யவில்லை.

(ஹாகிம்: 3231)

أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّنْعَانِيُّ بِمَكَّةَ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبَّادٍ، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَ مَعْمَرٌ، عَنْ جَعْفَرٍ الْجِذْرِيُّ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ {أُمَمٌ أَمْثَالُكُمْ} [الأنعام: 38] قَالَ: ” يُحْشَرُ الْخَلْقُ كُلُّهُمْ يَوْمَ الْقِيَامَةِ الْبَهَائِمُ، وَالدَّوَابُّ، وَالطَّيْرُ، وَكُلُّ شَيْءٍ فَيَبْلُغُ مِنْ عَدْلِ اللَّهِ أَنْ يَأْخُذَ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ، ثُمَّ يَقُولُ: كُونِي تُرَابًا فَذَلِكَ {يَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: 40]

«جَعْفَرٌ الْجِذْرِيُّ هَذَا هُوَ ابْنُ بُرْقَانَ، قَدِ احْتَجَّ بِهِ مُسْلِمٌ وَهُوَ صَحِيحٌ عَلَى شَرْطِهِ وَلَمْ يُخْرِجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3231.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-3158.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-முஹம்மத் பின் அப்துல்லாஹ்

2 . முஹம்மத் பின் அலீ-அஸ்ஸன்ஆனீ

3 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்-அத்தபரீ

4 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்-அல்ஹுமைரீ

5 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா

6 . ஜஅஃபர் பின் புர்கான்-அல்ஜஸரீ, அல்கிலாபீ

7 . யஸீத் பின் அஸம்-அல்ஆமிரீ

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


மேலும் பார்க்க: முஸ்லிம்-5038.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.