தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-40

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்த சமயத்தில், (அவர்களைச் சந்திக்க) ஒரு மூதாட்டி வந்தார். அவரிடம், “நீங்கள் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், “நான் ஜஸ்ஸாமதுல் முஸனிய்யா (சடலம்-முஸனீ கிளையை சேர்ந்தவள் என்ற பெயருடைவர்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை (இனி) உங்கள் பெயர் ஹஸ்ஸானதுல் முஸனிய்யா (அழகானவள்-முஸனீ கிளையை சேர்ந்தவள்) என்று இருக்கட்டும் என்று கூறிவிட்டு, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எவ்வாறு உள்ளது? எங்களுக்கு பிறகு எப்படி இருந்தீர்கள்? என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மூதாட்டி, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையும், தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று  கூறினார்.

அம்மூதாட்டி சென்ற பிறகு, அல்லாஹ்வின் தூதரே! இந்த மூதாட்டியை இந்தளவிற்கு வரவேற்று விசாரித்தீர்களே! (யார் இவர்?) என்று கேட்டேன். அதற்கவர்கள், “இவர், நான் கதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த காலத்தில் (கதீஜாவைக் காண) அடிக்கடி வந்து செல்வார்; (பிறரிடம்) நல்ல முறையில் நடந்துக் கொள்வதும் ஈமானில் அடங்கும்” என்று பதிலளித்தார்கள்.

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்ட சரியான ஹதீஸாகும். இதில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்களை அதிகமான ஹதீஸ்களில் இருவருமே ஆதாரமாக ஏற்றுள்ளனர். மேலும் இதில் எந்த (இல்லத்) குறையும் இல்லை.

(ஹாகிம்: 40)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، ثنا أَبُو عَاصِمٍ، ثنا صَالِحُ بْنُ رُسْتُمَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

جَاءَتْ عَجُوزٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عِنْدِي، فَقَالَ: لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْتِ؟» قَالَتْ: أَنَا جَثَّامَةُ الْمُزَنِيَّةُ، فَقَالَ: «بَلْ أَنْتِ حَسَّانَةُ الْمُزَنِيَّةُ، كَيْفَ أَنْتُمْ؟ كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ كُنْتُمْ بَعْدَنَا؟» قَالَتْ: بِخَيْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَلَمَّا خَرَجَتْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُقْبِلُ عَلَى هَذِهِ الْعَجُوزِ هَذَا الْإِقْبَالَ؟ فَقَالَ: «إِنَّهَا كَانَتْ تَأْتِينَا زَمَنَ خَدِيجَةَ، وَإِنَّ حُسْنَ الْعَهْدِ مِنَ الْإِيمَانِ»

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ فَقَدِ اتَّفَقَا عَلَى الِاحْتِجَاجِ بِرُوَاتِهِ فِي أَحَادِيثَ كَثِيرَةٍ وَلَيْسَ لَهُ عِلَّةٌ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-40.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-38.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19512-ஸாலிஹ் பின் ருஸ்தும்-அபூஆமிர் அல்ஃகஸ்ஸாஸ் என்பவர் பற்றி தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    முஹம்மது பின் வழ்ழாஹ், பஸ்ஸார், அபூநுஐம் ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் தனது ஸியர் என்ற நூலில் இவரை ஆதாரமாக ஏற்றுள்ளார்…

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்றும்; இவர் பலமானவர்; பஸராவாசிகளின் தலைவர் என்றும் முஹம்மது பின் வழ்ழாஹ் அவர்கள் கூறியுள்ளார்

  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    ஆகியோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரைப் பற்றி ஸாலிஹ் என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது; மற்றவர்கள் இவரைப் போன்று அறிவித்திருந்தால் ஏற்கலாம் என்பதாகும்)

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான் அவர்கள், (தான் ஹதீஸை கேட்கும் ஆசிரியர்களின் நம்பகத்தன்மை பற்றி நன்கு தெரிந்த பிறகே அறிவிப்பேன் என்ற கடும்போக்கு கொண்டவராக இருந்தும்) இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார் என்பதால் இவர் என் பார்வையில் பரவாயில்லை-குறையில்லை என்றும், இவரிடமிருந்து ஒரே ஒரு-(எந்த) முன்கரான செய்தியையும் நான் காணவில்லை என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ليس بالقوي – லைஸ பில்கவிய்யி-இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் ஹஸன் தரம்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதாகும்)

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியதாகவும், لا شيء- இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. لا شيء என்பதை குறைந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறுவார். இவர் பலவீனமானவர் என்பதற்கு என்ன காரணம் என்றுக் கூறப்படாததால் இந்த விமர்சனம் (ஹதீஸ்கலை விதியின்படி) ஏற்கப்படாது. இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் கருத்தின் படியே உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்றும் அதிகம் தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் தனது மீஸானுல் இஃதிதாலில் இவர் பலமானவர் என்ற முடிவே அமலில் உள்ளது என்பதைக் குறிக்கும் [صح] என்ற குறியீட்டைக் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/403, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/111, தஹ்தீபுல் கமால்-13/47, தாரீகுல் இஸ்லாம்-4/85, ஸியரு அஃலாமின் நுபலா-7/28, மீஸானுல் இஃதிதால்-2/294, தஹ்தீபுத் தஹ்தீப்-2/194, தக்ரீபுத் தஹ்தீப்-1/445)

  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

(நூல்: அஸ்ஸஹீஹா-216)

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிஹ் பின் ருஸ்தும் —> அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) 

பார்க்க: முஃஜமு இப்னுல் அஃராபீ-774 , ஹாகிம்-40 , முஸ்னதுஷ் ஷிஹாப்-971 , ஷுஅபுல் ஈமான்-8701 , …

இந்தக் கருத்தில் வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் செய்திகள் வந்துள்ளன…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.