இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.
மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு .
இவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார்.
இவரின் கிப்தி கிளையைச் சேர்ந்த தாய்மாமன்கள் விடுதலையாகி இருப்பார்கள். அவர்களில் எவரும் அடிமையாக இருக்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜா: 1511)حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ، وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا، وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ، وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1511.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1500.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உஸ்மான் மிக பலவீனமானவர்.
متروك الحديث
تقريب التهذيب: (1 / 112)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … இப்னு மாஜா-1511, அபூதாவூத்-3188,
2 .
3 .
- நபி (ஸல்) அவர்கள் தனது மகன் இப்ராஹீம் அவர்களுக்கு தொழுகை நடத்தவில்லை என்று வரும் செய்திகளே சரியானவை.
பார்க்க: அபூதாவூத்-3187.
- இப்ராஹீம் அவர்களுக்கு சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன.
பார்க்க: புகாரி-1382.
- இப்ராஹீம் உயிரோடு இருந்தால் நபியாக இருப்பார் என்ற கருத்தில் வரும் செய்திகள் அனஸ் (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி) போன்றோரின் சொல்லாகவே வந்துள்ளது.
1 . அனஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-12358, 13985,
2 . இப்னு அபூஅவ்ஃபா (ரலி) வழியாக:
பார்க்க: புகாரி-6194,
…
சமீப விமர்சனங்கள்