தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2892

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு அவன் பதிலளிக்கிறான்; அவனிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அவர்களுக்கு அவன் மன்னிப்பு வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 2892)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَالِحٍ، مَوْلَى بَنِي عَامِرٍ قَالَ: حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«الْحُجَّاجُ وَالْعُمَّارُ، وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ، وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2892.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2887.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19556-ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் பற்றி இவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    கூறியுள்ளார். (நூல்: அல்காமிலு ஃபிள் ளுஅஃபா 5/104 ).
  • அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/446 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்த செய்தி நபித்தோழரின் கூற்று என்பதே உண்மை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2892 , நஸாயீ-2625 , 3121 , குப்ரா நஸாயீ-3591 , 4314 , இப்னு குஸைமா- 2511 , இப்னு ஹிப்பான்-3692 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6311 ,  ஹாகிம்-1611 , குப்ரா பைஹகீ-10387 , 10388 ,

…அல்முஃஜமுல் அவ்ஸத்-7779 ,

2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2893 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.