தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2893

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 2893)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ، وَفْدُ اللَّهِ، دَعَاهُمْ، فَأَجَابُوهُ، وَسَأَلُوهُ، فَأَعْطَاهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2884.
Ibn-Majah-Shamila-2893.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32015-இம்ரான் பின் உயைனா பற்றி அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். அபூஸுர்ஆ அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/321)
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் இவரின் அறிவிப்பில் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்…

2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2893 , இப்னு ஹிப்பான்-4613 , அல்முஃஜமுல் கபீர்-13556 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-2892 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.