தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4048

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குர்ஆனும், கல்வியறிவும் மறைந்து போகுதல்.

ஸியாத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டபோது, “அது கல்வியறிவு மறைந்து போகும் நேரத்தில் நிகழும்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம்; எங்கள் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோம்; எங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களே! அப்படியிருக்கும்போது, கல்வி எப்படி மறைந்து போகும்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட்டும்! நான் உன்னை மதீனாவில் உள்ள அறிவார்ந்தவர்களில் ஒருவராகவே கருதினேன். இந்தக் கல்வி யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் உள்ளது போலவே இருக்கும். அவர்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள எதனையும் செயல்படுத்துவதில்லை” என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா: 4048)

بَابُ ذَهَابِ الْقُرْآنِ وَالْعِلْمِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ، قَالَ:

ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ، وَالنَّصَارَى، يَقْرَءُونَ التَّوْرَاةَ، وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا؟»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4048.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


التاريخ الكبير للبخاري (3/ 344 ت المعلمي اليماني):
‌‌1163 – زياد بْن لبيد البياضي الْأَنْصَارِيّ، قَالَ وكيع عَنِ الأعمش عَنْ سالم بْن أَبِي الجعد عَنْ زياد عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: هذا أوان يرفع العلم – وقال: أن زيادا، ولا أرى سالما سَمِعَ من زياد.


4 . இந்தக் கருத்தில் ஸியாத் பின் லபீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


சரியான ஹதீஸ் பார்க்க: குப்ரா நஸாயீ-5878.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.