அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, “இது கல்வியறிவு உயர்த்தப்படும் நேரம்” என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரி (நபிதோழர்)களில் ஒருவரான லபீத் பின் ஸியாத் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்வியறிவு உறுதியாகி, உள்ளங்களால் மனனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது எப்படி உயர்த்தப்படும்?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனாவாசிகளிலேயே நீ மிகவும் அறிவார்ந்தவர் என்று நான் நினைத்திருந்தேன்!” என்று கூறி, யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் கையில் வைத்திருந்தும் எவ்வாறு வழிகெட்டுப் போனார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள்.
(இந்த ஹதீஸை அறிவித்த ஜுபைர் பின் நுஃபைர்-ரஹ் கூறுகிறார்): பின்னர் நான் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறிய இந்த ஹதீஸைச் சொன்னேன். அப்போது அவர், “அவ்ஃப் உண்மையைச் சொன்னார். கல்வியறிவு உயர்த்தப்படுவதில் முதலில் உயர்த்தப்படுவது எது என்று நான் உனக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்றேன். அதற்கு அவர், “அல்லாஹ்வுக்குப் பணிந்து நடக்கும் குணம் முதலில் உயர்த்தப்படும். ஒரு கட்டத்தில், பணிந்து நடப்பவர் ஒருவரையும் நீ காண மாட்டாய்” என்று கூறினார்.
(குப்ரா-நஸாயி: 5878)أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: سَمِعْتُ اللَّيْثَ بْنَ سَعْدٍ، يَقُولُ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى السَّمَاءِ يَوْمًا فَقَالَ: «هَذَا أَوَانٌ يُرْفَعُ الْعِلْمُ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: لَبِيدُ بْنُ زِيَادٍ: يَا رَسُولَ اللهِ يُرْفَعُ الْعِلْمُ وَقَدْ أُثْبِتَ وَوَعَتْهُ الْقُلُوبُ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتُ لَأَحْسَبُكَ مِنْ أَفْقَهِ أَهْلِ الْمَدِينَةِ»، وَذَكَرَ لَهُ ضَلَالَةَ الْيَهُودِ، وَالنَّصَارَى عَلَى مَا فِي أَيْدِيهِمْ مِنْ كِتَابِ اللهِ، قَالَ: فَلَقِيتُ شَدَّادَ بْنَ أَوْسٍ، فَحَدَّثْتُهُ بِحَدِيثِ عَوْفِ بْنِ مَالِكٍ، فَقَالَ: صَدَقَ عَوْفٌ أَلَا أُخْبِرُكَ بِأَوَّلِ ذَلِكَ يُرْفَعُ؟، قُلْتُ: بَلَى، قَالَ: الْخُشُوعُ حَتَّى لَا تَرَى خَاشِعًا
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-5878.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-5706.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . ரபீஉ பின் ஸுலைமான்
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
4 . லைஸ் பின் ஸஃத்
5 . இப்ராஹீம் பின் அபூஅப்லா
6 . வலீத் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜுரஷீ
7 . ஜுபைர் பின் நுஃபைர்
8 . அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அல்அஷ்ஜஈ (ரலி)
1 . இந்தக் கருத்தில் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்திகள்:
இப்னு வஹ்ப் …
பார்க்க: குப்ரா நஸாயீ-5878, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-,
யஹ்யா பின் புகைர் …
பார்க்க: கல்கு அஃப்ஆலில் இபாத்-, அல்முஃஜமுல் கபீர்-,
2 . ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . ஸியாத் பின் லபீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-4048.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-80,
சமீப விமர்சனங்கள்