4171. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சுருக்கமாக அறிவுரை கூறுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
1 . “நீர் தொழுகையில் நின்றால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!;
2 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல்லையும் பேசாதீர்!;
3 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக!” என்று கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ قَالَ: حَدَّثَنِي عُثْمَانُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي، وَأَوْجِزْ، قَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ، وَأَجْمِعِ الْيَأْسَ عَمَّا فِي أَيْدِي النَّاسِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4161.
Ibn-Majah-Shamila-4171.
Ibn-Majah-Alamiah-4161.
Ibn-Majah-JawamiulKalim-4169.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (3. பலமானவர்).
2 . முஹம்மத் பின் ஸியாத் (4. நடுத்தரமானவர்).
3 . ஃபுளைல் பின் ஸுலைமான் அன்னுமைரீ (5. சிறிது நடுத்தரமானவர்).
4 . அப்துல்லாஹ் பின் உஸ்மான் (6. பிறர் சார்புடையவர்)…
5 . உஸ்மான் பின் ஜுபைர்-அல்அன்ஸாரீ (6. பிறர் சார்புடையவர்)…
6 . அபூஅய்யூப் (ரலி)-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்).
மேலும் பார்க்க: அஹ்மத்-23498.
சமீப விமர்சனங்கள்