அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போன்று நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் (வார்த்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) சைக்கினையின் மூலமும் இருக்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(குப்ரா-நஸாயி: 10100)أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ قَالَ: حَدَّثَنِي الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ، عَنْ ثَوْرٍ قَالَ: حَدَّثَ أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تُسَلِّمُوا تَسْلِيمَ الْيَهُودِ وَالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَهُمْ بِالْأَكُفِّ وَالرُّؤوسِ وَالْإِشَارَةِ»
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-10100.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-9750.
- இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் ஜய்யித் என்று கூறியுள்ளார். (ஸஹீஹ் அல்லது ஹஸன் தரத்திற்கு இவ்வாறு கூறப்படும்)
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-11/14, 19)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-318-இப்ராஹீம் பின் முஸ்தமிர் என்பவர் நம்பகமானவர் என்றாலும் சில அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார். (அதாவது மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை இவர் மட்டும் தனித்து அறிவிப்பார் என்பது இதன் கருத்தாகும்) இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவ்வாறு கூறியிருப்பதையே இப்னு ஹஜரும் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/116)
ஸல்த் பின் முஹம்மதிடமிருந்து ஹஸன் பின் அலீ அறிவிக்கும் செய்தி தைலமியில் இடம்பற்றிருப்பதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார். எனவே இப்ராஹீம் பின் முஸ்தமிர் இந்த செய்தியை தனித்து அறிவிக்கவில்லை என்பதாலும், இந்த கருத்தில் வரும் செய்திகளை ஷாஹித், முதாபஅத்தைக் கவனித்து அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஸஹீஹ் அல்லது ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1783)
(என்றாலும் இதில் வரும் அபுஸ்ஸுபைர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இந்த செய்தியில் அவர் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை)
ஆய்வுக்காக: தத்லீஸ்-அபுஸ்ஸுபைர் .
2 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-10100 , ஷுஅபுல் ஈமான்-8520 ,
..முஸ்னத் அபீ யஃலா-1875 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4437 , ஷுஅபுல் ஈமான்-8521 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2695 .
சமீப விமர்சனங்கள்