தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-8771

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. ஒரு மனிதரின் பெயரைப் பற்றிக் கேட்டு, அவருடையப் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும். 

அவர்கள் ஒரு ஊரின் பெயரைப் பற்றி விசாரித்து அதன் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(குப்ரா-நஸாயி: 8771)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ مُعَاذِ بْنِ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ وَكَانَ مِنَ الْمُهَاجِرِينَ قَالَ:

«مَا كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ، وَلَكِنْ كَانَ إِذَا سَأَلَ عَنِ اسْمِ الرَّجُلِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ، وَإِذَا سَأَلَ عَنِ اسْمِ الْأَرْضِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-8771.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-8500.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கத்தாதா அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடம் செவியேற்கவில்லை என சில அறிஞர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : ஜாமிஉத் தஹ்ஸீல் எண்-633)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-22946 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.