தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-9923

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஹா! ஆஹா! இந்த ஐந்து விஷயங்கள் (மறுமை நாளில் நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசைக் கனக்க வைக்கும் அதிசயம் தான் என்ன! அவைகள்:

1 . லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை).

2 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்).

3 . அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே).

4 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).

5 . ஒரு முஸ்லிம் தனது குழந்தை மரணிக்கும்போது, நன்மையை நாடி அதைப் பொறுத்துக் கொள்வது.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரான அபூஸல்மா-ஹுரைஸ் (ரலி)

(குப்ரா-நஸாயி: 9923)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، وَعِيسَى بْنُ مُسَاوِرٍ قَالَا: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْعَلَاءِ، وَابْنِ جَابِرٍ قَالَا: حَدَّثَنَا أَبُو سَلَامٍ، عَنْ أَبِي سَلْمَى، رَاعِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

” بَخٍ بَخٍ، مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَسُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللهُ أَكْبَرُ، وَالْعَبْدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمُسْلِمِ فَيَحْتَسِبُهُ “


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-9923.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-9595.




குறிப்பு: நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ராவின் பிரதிகளில் وَالْعَبْدُ الصَّالِحُ -என்று இடம்பெற்றுள்ளது. என்றாலும் வேறு நூல்களில் وَالولد الصَّالِحُ என்று இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக உள்ள வார்த்தை அமைப்பே சரியானதாகும்.


இந்தச் செய்தியின் இரு வகை அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷுஐப்

2 . அம்ர் பின் உஸ்மான்-அல்குரஷீ, 3 . ஈஸா பின் முஸாவிர்.

4 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

5 . அப்துல்லாஹ் பின் அலாஃ, 6 . அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர்.

7 . மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம்

8 . ஹுரைஸ்-அபூஸல்மா (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

1 . இந்தச் செய்தியை அபூஸல்லாம் மம்தூர் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் நபித்தோழரின் பெயரை குறிப்பிடாமலும், வேறு சிலர் ஸவ்பான் என்றும், வேறு சிலர் ஸஃபீனா என்றும், வேறு சிலர் அபூஸல்மா என்றும் அறிவித்துள்ளனர். இவற்றில் அபூஸல்மா-ஹுரைஸ் (ரலி) என்று குறிப்பிட்டவர்களின் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

2 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் அவர்கள் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸல்லாம் —> ஒரு நபித்தோழர் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். யஹ்யா அவர்களின் மாணவர்களில் ஹிஷாம் அவர்களே மிகவும் முன்னுரிமை பெற்றவர் என்பதால் அவரின் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் ஆகும். இதன் படி யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள் அபூஸல்லாம் அவர்களிடமிருந்து ஹதீஸை செவியேற்கவில்லை என்பதால் இந்த வகை அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது. (பார்க்க: அஹ்மத்-23100, ஹிஷாம் பற்றி: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/59)

வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட செய்தியே சரியானதாகும்.


تحفة الأشراف بمعرفة الأطراف (9/ 220):
12049 -[سي] حديث بخ بخ لخمس ما أثقلهن في الميزان … الحديث
س في اليوم والليلة (62: 2) عن عمرو بن عثمان وعيسى بن مسارو، كلاهما عن الوليد بن مسلم، عن عبد الله بن العلاء وابن جابر، كلاهما عن أبي سلام، عن أبي سلمى به.
رواه هشام الدستوائي،عن يحيى بن أبي كثير، عن أبي سلام، قال: حدثني رجل أنَّه سمع النبي صلى الله عليه وسلم ولم يسمه.
رواه أبان بن يزيد،عن يحيى بن أبي كثير، عن أبي سلام، عن مولى رسول الله صلى الله عليه وسلم.
وروي عن عبد الله بن العلاء بن زبر، عن أبي سلام، عن ثوبان عن النبي صلى الله عليه وسلم، ‌
وكان ‌حديث ‌الوليد ‌بن ‌مسلم ‌أشبه ‌بالصواب والله أعلم.

மிஸ்ஸீ இமாம் கூறுகிறார்:

1 . ஆஹா! ஆஹா! இந்த ஐந்து விஷயங்கள் தராசைக் கனக்க வைக்கும் அதிசயம் தான் என்ன! என்ற ஹதீஸை அம்ர் பின் உஸ்மான், ஈஸா பின் முஸாவிர் —> வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
—> அப்துல்லாஹ் பின் அலா, இப்னு ஜாபிர் —> அபூஸல்லாம் —> அபூஸல்மா (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் தனது ஸுனன் குப்ரா, அமலுல் யவ்மி வல்லைலா-2/62 ஆகிய நூல்களில் பதிவு செய்துள்ளார்.

2 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் அத்தஸ்துவாஈ அவர்கள் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸல்லாம் —> நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்ற ஒரு மனிதர் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அந்த மனிதரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

3 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபான் பின் யஸீத் அவர்கள் யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸல்லாம் —> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமை என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

4 .  அப்துல்லாஹ் பின் அலாஉ பின் ஸப்ர் அவர்களின் வழியாக அபூஸல்லாம் —> ஸவ்பான் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களின் அறிவிப்பே சரியாக இருக்க வாய்ப்புள்ளது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்கள்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-9/220…)


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அபூஸல்மா-ஹுரைஸ் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்திக்கே அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் முன்னுரிமை தந்துள்ளார்.

(நூல்: ஸஹீஹா-1204)


1 . இந்தக் கருத்தில் ஹுரைஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

வலீத் பின் முஸ்லிம்…

பார்க்க: தபகாத்துல் குப்ரா-, அஸ்ஸுன்னா-இப்னு அபூஆஸிம்-781, அல்ஆஹாத் வல்மஸானீ-இப்னு அபூஆஸிம்-470, குப்ரா நஸாயீ-9923, அமலுல் யவ்மி வல்லைலா-நஸா_யீ-167, அல்குனா வல்அஸ்மா-தூலாபீ-218, இப்னு ஹிப்பான்-833, அல்முஃஜமுல் கபீர்-, அத்துஆ-தப்ரானீ, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-தப்ரானீ-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு மன்தா-, ஹாகிம்-1885, ஃபவாஇத் தம்மாம்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-, ஷுஅபுல் ஈமான்-, …


யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் —> அபூஸல்லாம்…

பார்க்க: அஹ்மத்-15662, 18076,


யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸல்லாம்…

பார்க்க: அஹ்மத்-23100,


 


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.