முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பனூ உமைய்யாக்களின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஜுமுஆ உரை நடைபெறும்போது ஒருவர் பள்ளிக்கு வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தால்) அவர் மூன்று விரலைக் காட்டி அனுமதி பெறுவார். பிறகு ஸியாத் (ஆட்சிக்கு) வந்தபோது மக்கள் இப்படி அதிகம் செய்ததால் அவர் இதை ஒரு தொல்லையாக கருதினார். எனவே அவர், (இனிமேல் யாரும் வெளியே செல்வதாக இருந்தால்) ஒருவர் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதே அவர் இமாமின் அனுமதி பெற்றவர் தான் என்று கூறினார்.
(musannaf-abdur-razzaq-5509: 5509)عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ:
كَانَ النَّاسُ يَسْتَأْذِنُونَ فِي الْجُمُعَةِ، وَيَقُولُونَ: هَكَذَا، يُشِيرُ بِثَلَاثِ أَصَابِعَ، فَلَمَّا كَانَ زِيَادٌ كَثُرُوا عَلَيْهِ فَاغْتَمَّ، فَقَالَ: «مَنْ أَمْسَكَ عَلَى أَنْفِهِ فَهُوَ إِذْنُهُ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-5509.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்கள் தாபிஈ ஆவார். மேலும் இது அறிவிப்பாளர்தொடர் சரியான; மக்தூஃவான செய்தியாகும். ஒரு தாபிஈ தன் காலத்தில் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த ஒரு சட்டத்தை அறிவிக்கிறார். இதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
1 . இந்தக் கருத்தில் இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5509 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5211 , 36426 ,
2 . முஹம்மது பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரின் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5510 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1114 ,
சமீப விமர்சனங்கள்