அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமத்தில் வசிப்பவர்களில் ஸாஹிர் எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கிராமத்திலிருந்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குபவராக இருந்தார். அவர் வந்து மீண்டும் (பயணம்) செல்ல விரும்பும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பயண ஏற்பாட்டைச் செய்வார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஸாஹிர் நமக்கு கிராமவாசி. நாம் அவருக்கு நகரவாசிகள்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரை நேசிப்பவராக இருந்தார்கள். மேலும் அவர் அழகற்றவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்க்கவில்லை. எனவே அவர், “என்னை விடுங்கள்! நீங்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த போது, நபி (ஸல்) அவர்களை அடையாளம் கொண்டார். எனவே அவர் தனது முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்புடன் ஒட்டிக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை யார் வாங்குகிறார்கள்?” என்று கூற ஆரம்பித்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நான் ஒரு விலையில்லாதவனாக-செல்லாக்காசாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆனால் நிச்சயமாக நீ அல்லாஹ்விடம் விலையில்லாதவன் அல்ல” அல்லது “அல்லாஹ்விடம் நீ விலைமதிப்பற்றவன்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 12648)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ،
أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا، وَكَانَ يُهْدِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا، وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَلَا يُبْصِرُهُ الرَّجُلُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا، فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ عَرَفَهُ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12648.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது…
العلل لابن المديني (ص72):
وَفِي أَحَادِيثِ مَعْمَرٍ عَنْ ثَابِتٍ أَحَادِيثُ غَرَائِبٌ وَمُنْكَرَةٌ جَعَلَ ثَابِتَ عَنْ أَنَسٍ أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ كَذَا شَيْء ذَكَرَهُ وَإِنَّمَا هَذَا حَدِيثُ أَبَانَ بْنِ أَبِي عَيَّاشٍ عَنْ أَنَسٍ
…
المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 166):
وَسُئِلَ عَمَّا رَوَى مَعْمَرٌ عَنْ ثابت؟ فقال: ما أحسن حديثه.
ثم قال: حماد بن سلمة أحب إلي ليس أحد فِي ثَابِتٍ مِثْلَ حَمَّادِ بْنِ سَلَمَةَ.
التاريخ الكبير للبخاري (4/ 411 ت الدباسي والنحال):
[4330] زَاهِرُ بنُ حَرَامٍ الأَشْجَعِيُّ .
قال هِلالُ بنُ فَيَّاضٍ: حدَّثنا رافعُ بنُ سَلمةَ البَصْرِيُّ، سَمِعَ أباهُ، عن سالمٍ، عن زاهرِ بنِ حرامٍ الأَشجعيِّ، وَكانَ بَدَوِيًّا يَأتِي النَّبِيَّ صلى الله عليه وسلم بطُرْفَةٍ أو هَدِيَّةٍ، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: “إِنَّ لِكُلِّ حَاضِرَةٍ بَادِيَةً، وَإِنَّ بَادِيَةَ آلِ مُحَمَّدٍ زَاهِرُ بنُ حَرَامٍ”.
وقال عبدُ اللَّه بنُ مُحمَّدٍ: عن هِشامِ بنِ يُوسُفَ، أَخْبَرَنَا مَعمرٌ، عن ثابتٍ، عن أَنَسٍ: كَانَ زَاهِرُ بنُ حَرَامٍ يُهْدِي لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، نَحوَهُ.
وروى شُعيبُ بنُ صَفوانَ، عن ثابتٍ، عن سالمِ بنِ أبي الجَعْدِ، عنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
…
الإصابة في تمييز الصحابة (2/ 452):
وخالفه معمر، وقد رواه حماد بن سلمة فقال: عن ثابت، عن إسحاق بن عبد اللَّه بن الحارث مرسلا، وهو حماد في ثابت أقوى من معمر، ولكن للحديث شاهد من رواية سالم بن أبي الجعد الأشجعيّ، عن رجل من أشجع يقال له زاهر بن حرام كان بدويا لا يأتي النبيّ صلى الله عليه وآله وسلم إذا أتاه إلا بطرفة أو هديّة، فرآه النبيّ صلى الله عليه وآله وسلم يبيع سلعة فأخذ بوسطه … الحديث.
…ஸாலிம் பின் அபுல்ஜஃத் அவர்கள் சில நபித்தோழர்களிடம் நேரடியாக ஹதீஸ்களை கேட்டுள்ளார். சில நபித்தோழர்களிடமிருந்து ஸிமாஃவை-நேரடியாக கேட்டேன் என்று கூறாமல் அறிவித்துள்ளார். எனவே இவர் அதிகம் முர்ஸலாக அறிவிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இந்தச் செய்தியில் ஸிமாஃவை கூறவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் அறிவிக்கும், ஸாபித் —> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற முர்ஸலான அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மஃமர் —> ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: …
2 . ஸாஹிர் … வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5310.
3 .
சமீப விமர்சனங்கள்