அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமைநாளின் மஹ்ஷர் பெருவெளியில்) மக்களுக்கு தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொருவரும், (உலகில் தான்) செய்த தர்மத்தின் நிழலில் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் அபூஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுல் கைர் (ரஹ்) அவர்கள், ஏதேனும் தவறுசெய்தால் அந்த நாளில் எதையாவது தர்மம் செய்துவிடுவார். அது கேக் போன்ற இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும் அல்லது வெங்காயமாக இருந்தாலும் அல்லது இதுபோன்று வேறு எதுவாக இருந்தாலும் சரியே! (அதை தர்மம் செய்துவிடுவார்).
(முஸ்னது அஹ்மத்: 17333)حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُبَارَكٍ، أَخْبَرَنَا حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ، أَنَّهُ سَمِعَ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، يُحَدِّثُ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
” كُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُفْصَلَ بَيْنَ النَّاسِ – أَوْ قَالَ: يُحْكَمَ بَيْنَ النَّاسِ – “
قَالَ يَزِيدُ: «وَكَانَ أَبُو الْخَيْرِ لَا يُخْطِئُهُ يَوْمٌ إِلَّا تَصَدَّقَ فِيهِ بِشَيْءٍ وَلَوْ كَعْكَةً أَوْ بَصَلَةً أَوْ كَذَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17333.
Musnad-Ahmad-Alamiah-16695.
Musnad-Ahmad-JawamiulKalim-16999.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அலீ பின் இஸ்ஹாக்
3 . அப்துல்லாஹ் பின் முபாரக்
4 . ஹர்மலா பின் இம்ரான்
5 . யஸீத் பின் அபூஹபீப்
6 . மர்ஸத் பின் அப்துல்லாஹ் (அபுல் கைர்)
7 . உக்பா பின் ஆமிர் (ரலி)
1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹர்மலா பின் இம்ரான் —> யஸீத் பின் அபூஹபீப் —> மர்ஸத் பின் அப்துல்லாஹ் —> உக்பா பின் ஆமிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-17333 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
2 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு குஸைமா-2432 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-660 , திர்மிதீ-664 ,
சமீப விமர்சனங்கள்