அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருடன் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ கொண்டு வந்து பிறகு இறைநம்பிக்கையாளரிடம் அவரை ஒப்படைத்து, “இவர்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
அபூபுர்தா (ரஹ்) கூறுகிறார்:
இந்த செய்தியை நான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், வணக்கத்திற்குரியவன் யாரைத் தவிர வேறு யாருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூஸா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நான், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினேன். அதனால் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
(முஸ்னது அஹ்மத்: 19600)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ وَهُوَ النَّضْرُ بْنُ إِسْمَاعِيلَ يَعْنِي الْقَاصَّ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ لَمْ يَبْقَ مُؤْمِنٌ إِلَّا أُتِيَ بِيَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ حَتَّى يُدْفَعَ إِلَيْهِ. يُقَالُ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ “
قَالَ أَبُو بُرْدَةَ فَاسْتَحْلَفَنِي عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ: أَسَمِعْتَ أَبَا مُوسَى يَذْكُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ. فَسُرَّ بِذَلِكَ عُمَرُ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19600.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19163.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46524-அபுல்முகீரா-நள்ர் பின் இஸ்மாயீல் பலமானவர் அல்ல.
- இவரைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இவர் அறிவிப்பாளர்தொடரை சரியாக மனனமிடாதவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ, யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர். இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என ஸாஜீ அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/221, தக்ரீபுத் தஹ்தீப்-1/1001, அல்காஷிஃப்-4/393)
மேலும் பார்க்க: முஸ்லிம்-5342 .
சமீப விமர்சனங்கள்