நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்:
“என் அடியார்களே! நான் பாவங்களை மன்னித்து அருள்புரிந்தவரைத் தவிர உங்கள் யாவரும் பாவிகளே! எனவே, நீங்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்களை மன்னிப்பேன்! மேலும், உங்களில் எவரேனும் பாவங்களை மன்னிக்க நான் ஆற்றலுடையவன் என்று அறிந்து கொண்டு, என் ஆற்றலின் மூலம் என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால் அவரை நான் மன்னிப்பேன். நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.
மேலும், நான் நேர்வழியில் செலுத்தியவரைத் தவிர உங்கள் யாவரும் வழிதவறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் நேர்வழி கேளுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுவேன்!
மேலும், நான் செல்வம் அளித்தவரைத் தவிர உங்கள் யாவரும் வறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் கேளுங்கள்! உங்களுக்கு நான் உணவளிப்பேன்!
மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும்…, உங்கள் காய்ந்ததுமான… யாவரும் என் அடியார்களில் மிக அஞ்சிய அடியானின் உள்ளத்தின் மீது கூடி நின்றாலும், என் ஆட்சியில் ஓர் கொசுவின் இறக்கையளவும் அதிகரிக்க முடியாது.
மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும், உங்கள் காய்ந்ததுமான யாவரும் கூடி நின்று, அவர்களில் ஒவ்வொரு கேட்பவரும் தன் விருப்பம் எட்டியதைக் கேட்டாலும், மேலும், கேட்ட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கேட்பவனுக்கும் நான் அளித்தாலும், அது எனக்கு எதனையும் குறைக்காது. உங்களில் எவரேனும் கடற்கரையின் விளிம்பின் மீது கடந்து, ஓர் ஊசியை அதில் நனைத்து, பிறகு அதை வெளியே எடுத்தால் அது எவ்வளவு குறைக்குமோ அவ்வளவே தவிர.
அது ஏனெனில், நான் அதிகக் கொடையாளன், பெருமைக்குரியவன், எல்லாவற்றையும் உடையவன். நான் நாடியதைச் செய்வேன். நான் கொடுப்பது ஒரு சொல்லே! என் வேதனையும் ஒரு சொல்லே! நான் ஒரு பொருளை நாடினால், ‘ஆகு!’ என்று தான் நான் அதற்குச் சொல்வேன். உடனே அது ஆகிவிடும்.
(முஸ்னது அஹ்மத்: 21540)حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُوسَى يَعْنِي ابْنَ الْمُسَيَّبِ الثَّقَفِيَّ، عَنْ شَهْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ الْأَشْعَرِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” إِنَّ اللَّهَ يَقُولُ: يَا عِبَادِي، كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي، غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَكُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأُولَاكُمْ وَأُخْرَاكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَزِيدُوا فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأُولَاكُمْ وَآَخِرَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، وَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مَا سَأَلَ، لَمْ يَنْقُصْنِي، إِلَّا كَمَا لَوْ مَرَّ أَحَدُكُمْ عَلَى شَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ إِبْرَةً ثُمَّ انْتَزَعَهَا، ذَلِكَ لِأَنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، أَفْعَلُ مَا أَشَاءُ، عَطَائِي كَلَامٌ، وَعَذَابِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21540.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
…
மேலும் பார்க்க: திர்மிதீ-2495.
சமீப விமர்சனங்கள்