அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஒருவர் இறப்பார் என (அல்லாஹ்வால்) தீர்மானிக்கப்பட்டுவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை ஏற்படுத்தப்பட்டு, அதை விருப்பமாக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 21984)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرَكَانِيُّ، حَدَّثَنَا حُدَيْجٌ أَبُو سُلَيْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يُقَدَّرُ لِأَحَدٍ يَمُوتُ بِأَرْضٍ، إِلَّا حُبِّبَتْ إِلَيْهِ وَجُعِلَ لَهُ إِلَيْهَا حَاجَةٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21984.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21424.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11372-ஹுதைஜ்-அபூஸுலைமான் அறியப்படாதவர் என்று இப்னு ஹம்ஸா அல்ஹுஸைனீ குறிப்பிட்டு விட்டு இவர் ஸுஹைர் பின் முஆவியாவின் சகோதரர் ஹுதைஜ் பின் முஆவியாவாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், சந்தேகமில்லாமல் இவர் ஹுதைஜ் பின் முஆவியா தான் என்று கூறியுள்ளார்.
(நூல்:தஃஜீலுல் மன்ஃபஆ-1/438, தஹ்தீபுத் தஹ்தீப்-1/366)
1 . இவரின் சகோதரர் ஸுஹைர் பின் முஆவியா இவரைப் பொருட்படுத்துவதில்லை என்றும்; இவரை பொருந்திக்கொள்வதில்லை என்றும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் கூறியதாக ஆஜுரீ அறிவித்துள்ளார்.
2 . இவர் (ஹதீஸை அறிவிப்பதில்) பலவீனமானவர் என்று இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
கூறியுள்ளார்.
3 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவரை லைஸ பிஷைஃ-இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். (இதன் கருத்து மிகபலவீனமானவர் என்றிருந்தாலும் குறைந்த ஹதீஸ்களையுடைவர்களுக்கும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.இவ்வாறு கூறுவார்)
4 . இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்கும் அளவிற்கு இவர் இல்லை என்று கூறியுள்ளார்.
5 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரின் ஹதீஸ்களைப் பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார். இவர் அபூஇஸ்ஹாக் —> பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அறிவித்த ஒரு செய்தி பற்றி கேட்கப்பட்டபோது அந்த செய்தியை முன்கர் என்று கூறினார்.
6 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
7 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் நம்பகமானவர்; இவரின் இரு சகோதரர்களான ஸுஹைர், ருஹைல் அளவிற்கு பலமானவர் அல்ல. இவரின் சில ஹதீஸ்களில் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
8 . அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
பஸ்ஸார், அபூஅரூபா, அபூஸுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
9 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், குறைந்த ஹதீஸ்களே அறிவித்துள்ளார் என்பதுடன் அதிகம் தவறிழைத்துள்ளார் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவர் அதிகம் தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
10 . இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். என்னுடைய பார்வையில் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
11 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்றும் தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/310, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/356, தஹ்தீபுல் கமால்-5/488, அல்இக்மால்-4/11, தஹ்தீபுத் தஹ்தீப்-1/366, தக்ரீபுத் தஹ்தீப்-1/226).
மேலும் பார்க்க: திர்மிதீ-2146 .
சமீப விமர்சனங்கள்