தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27041

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எந்த ஒரு பெண்மணி (பொதுவான இடங்களில்) தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள திரையை நிச்சயமாக நீக்கிவிட்டவள் ஆவாள்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 27041)

حَدَّثَنَا هَارُونُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: وَقَالَ حَيْوَةُ: أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، أَنَّ يُحَنَّسَ أَبَا مُوسَى، حَدَّثَهُ أَنَّ أُمَّ الدَّرْدَاءِ، حَدَّثَتْهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهَا يَوْمًا، فَقَالَ: «مِنْ أَيْنَ جِئْتِ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» فَقَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنَ امْرَأَةٍ تَنْزِعُ ثِيَابَهَا، إِلَّا هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ مِنْ سِتْرٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27041.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


2 . இந்தக் கருத்தில் உம்முத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27041, …


மேலும் பார்க்க: அபூதாவூத்-4010.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.